வெள்ளரிக்காய் வைத்து சுவையான துவையல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ஒரு சிலருக்கு குழம்பு ரசம் தயிர் மோர் அப்படின்னா ஊத்தி சாப்பிடறதை விட துவையல் வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தேங்காய் துவையல், கொள்ளு துவையல், பாசிப்பயறு துவையல், துவரம் பருப்பு துவையல், பீர்க்கங்காய் துவையல் நிறைய துவையல் வெரைட்டீஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பாக்க

By Prem Kumar · 26/3/2026

ஒரு சிலருக்கு குழம்பு ரசம் தயிர் மோர் அப்படின்னா ஊத்தி சாப்பிடறதை விட துவையல் வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தேங்காய் துவையல், கொள்ளு துவையல், பாசிப்பயறு துவையல், துவரம் பருப்பு துவையல், பீர்க்கங்காய் துவையல் நிறைய துவையல் வெரைட்டீஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பாக்க போற இந்த வெள்ளரிக்காய் துவையல் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இந்த வெள்ளரிக்காய் துவையலை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பழைய சாதம் சுடு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சிலருக்கு இந்த வெள்ளரிக்காய் அப்படியே சாப்பிட பிடிக்காது அவர்கள் இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா அசந்து போயிடுவீர்கள். இந்த துவையலை சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. பொதுவாக வெள்ளரிக்காய் மருத்துவ குணம் நிறைந்த காய். இது மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அனைவரும் அதிகம் உட்கொள்ளப்படும்.

ஏனென்றால், இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும். செரிமானத்தை தூண்டும் பண்பு இதற்கு உண்டு. எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில், சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுப்பொருட்கள் உள்ளது. அந்தவகையில் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு வெள்ளரிக்காய் துவையலை வைத்து எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வெயில் காலத்துல கிடைக்க கூடிய வெள்ளரிக்காய் வைத்து சூப்பரான ஒரு வெள்ளரிக்காய் சாதம் செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full