வார ராசிபலன் 1 டிசம்பர் 2024 முதல் 7 நவம்பர் 2024 வரை!

மேஷம் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் ஏதாவது செலவு வைத்துக் கொண்டே இருப்பார்கள். சந்திக்க வேண்டிய நபரை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரத்தி

By ·

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் ஏதாவது செலவு வைத்துக் கொண்டே இருப்பார்கள். சந்திக்க வேண்டிய நபரை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த தொழிலாக இருந்தாலும் அதில் ஏற்றம் பெறுவீர்கள். விரோதிகள் கூட வீடு வரை வந்து உதவி செய்வார்கள். பயணங்களின் போது பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள். அரசாங்க ஊழியர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். வரவுக்கு மேல் செலவு வந்து வாட்டி எடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை காரணமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். கமிஷன் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். புதிதாக அறிமுகமான பெண்களிடம் நெருக்கமாக பழகாதீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெளிநாடு செல்வதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து பொருள் வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். மனைவி ஆசைப்பட்டு கேட்ட நகையை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களுக்கு ஏற்பாடுகளை செய்வீர்கள்.

சிம்மம்

இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்கள் கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவை அறிந்து நடந்து கொள்வதால் உங்கள் மீதுள்ள மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி இருக்கும். இரவுப் பயணம் தவிர்ப்பது நல்லது. பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.

கன்னி

இந்த வாரம் கன்னி ராசிகாரர்கள் வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். நண்பர்களை நம்பி முக்கிய காரியத்தில் இறங்க வேண்டாம். வழக்குகளில் சாதகமான முடிவை எதிர்பார்க்க இயலாது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் மனதை செலுத்தாதீர்கள். அதனால் வீண் விரயம் ஏற்படும். மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும்.

துலாம்

இந்த வாரம் துலாம் ராசிக்காரர்கள் விவசாயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுப்பீர்கள். தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். மனைவி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் சென்றாலும் அதை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகும். திட்டமிட்ட திருமணங்கள் சில காரணங்களால் தள்ளிப் போகலாம். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள். மனைவி பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

தனுசு

இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். லாட்டரி, பந்தயங்கள் அனுகூலமான பலனை தரும். நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வியாபாரத்தில் சில சிக்கல்களை கொண்டு வரலாம். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக பணம் கட்டுவீர்கள். மங்கல காரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

மகரம்

இந்த வாரம் மகர ராசிக்காரர்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். ஆனால் அரசாங்கத்தின் மூலமாக அதற்கு முட்டுக்கட்டை ஏற்படலாம். அரசியல்வாதிகளின் நட்பால் அதை விலக்கி வியாபாரத்திற்கு தேவையான வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். கட்டுமான தொழில் கை நிறைய பணத்தைக் கொண்டு வரும். நிலம் வாங்கி விற்பதில் சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். கணவன் – மனவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

கும்பம்

இந்த வாரம் கும்ப ராசிக்காரர்கள் வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்க தாமதமானாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் வந்து சேரும். புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களின் பணியை முதுகில் தட்டி பாராட்டுவார்கள். விரோதிகளின் சூழ்ச்சிகள் மாயமாக மறைந்து போகும். அரசாங்க உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்

இந்த வாரம் மீன ராசிக்காரர்கள் போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கை தேவை. புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தை விருத்தி செய்ய வியூகம் அமைத்து பாடுபடுவீர்கள். தொழிலுக்கு இருந்த தடங்கலை சாமர்த்தியமாக சரி செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாமல் மணக்குறையோடு இருந்த தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு என்பதை மனதில் வைத்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.

இதனையும் படியுங்கள் : டிசம்பர் மாத ராசிபலன் 2024!

Recipes AMP · Quick view
View full