வார ராசிபலன் – 30 நவம்பர் 2025 முதல் 06 டிசம்பர் 2025 வரை!!

மேஷம் மேஷ ராசியினர் இந்த வாரம் குடும்பத்தோடு சுற்றுலா செல்வார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி தொலைபேசி மூலம் வந்து சேரும்.உத்தியோகஸ்தர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் ப

By ·

மேஷம் 

மேஷ ராசியினர் இந்த வாரம் குடும்பத்தோடு சுற்றுலா செல்வார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி தொலைபேசி மூலம் வந்து சேரும்.உத்தியோகஸ்தர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமையும் பாக்கியமும் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பண வரவும் உண்டு. வெளியிடங்களில் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பணி புரியும் இடத்தில் பதட்டம் ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் மீது தவறு கண்டுபிடிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

ரிஷபம் 

ரிஷபம் ராசியினர் இந்த வாரம் பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையோடு எந்த ஒரு விஷயத்தை விவாதித்து முடிவு செய்யவும். உத்தியோகஸ்தர்கள் புதிய ப்ராஜெக்ட்களில் பிசியாக இருப்பார்கள். மாணவர்கள் இண்டர்ன்ஷிப் கிடைக்க பெறுவார்கள். சுபச் செய்திகள் காதுக்கு வரும். எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பணவரவுப் பிரச்னைகள் இருக்காது. சுப காரியங்கள் பூர்த்தியாகும். சிலருக்கு பொருளாதாரத்தில் சிறிய ஏமாற்றங்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு மனதில் புதிய சிந்தனைகள் ஏற்படும். குடும்ப விவகாரங்களில் நுணுக்கமாக செயல்பட்டு பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணி சார்பாக பயணங்களை மேற்கொள்வார்கள். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான பல வாய்ப்புகள் வந்து சேரும்.‌ சில எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் வழக்குகள் சாதகமாக முடிவாகும். கடன் பாக்கிகள் வசூலாகும். பணி புரியும் இடத்தில் பதட்டம் ஏற்படும். இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைக்க வேண்டி இருக்கும். சில விஷயங்களில் தவிர்க்க முடியாத தாமதம் ஏற்படும். சுப காரியங்களை முடிவெடுப்பதில் குழப்பங்கள் ஏற்படும்.

கடகம் 

கடகம் ராசியினர் குடும்ப சிக்கல்களுக்கு நல்ல தீர்வுகளை காணும் காலகட்டம் இது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மண், மனை வாகனங்களில் நன்மைகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்களுக்கு ஏற்ற நன்மைகள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் தடை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்கவும். ஆன்மிக விஷயங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணங்கள் அலைச்சல்கள் இருந்து கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவுகளில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

சிம்மம் 

சிம்ம ராசியினருக்கு சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவரால் பல்வேறு நன்மைகள் வந்து சேரும். தூரத்து உறவினர் உடைய தொடர்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களோடு இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவர். மாணவர்களுக்கு பாடத்திட்டம் சம்பந்தமான குழப்பம் தீரும். வியாபார வர்த்தகத்தில் புதிய உத்திகளை கையாண்டு பெருக்குவீர்கள். சிலர் புதிய கடைகளைத் தொடங்கலாம். அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். அன்றாடப் பணிகளில் கவனம் தேவை. வழக்குகள் இழுத்தடிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கன்னி 

கன்னி ராசியினர் இந்த வாரம் குடும்பத்துக்காக, பெற்றோருக்காக நேரம் ஒதுக்க வேண்டும். தொலைபேசி வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க ஆலோசனை பெறுவர். பொருள் சேர்க்கை உண்டு. செய்யும் செயல்களை தைரியமாகவும் வைராக்கியமாகவும் செய்வீர்கள். தொழில் போட்டிகள் குறையும். வேலைக்கு முயற்சித்து வரும் அன்பர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவியிடையே சிறு உரசல் வரும் வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான சில பிரச்னைகள் இழுபறியாக இருக்கும்.

துலாம் 

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு ஆன்மீக ரீதியான எண்ணங்கள் ஏற்படும். ஒரு சிலர் திருத்தல பயணங்கள் செல்வார்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு உரிய பயிற்சிகளை பெறுவார்கள். நினைத்த காரியங்கள் பலிக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகள் நிறைவேறும். முக்கிய புள்ளிகளின் அறிமுகம் உண்டு அவர்களால் ஆதாயமும் உண்டு. உத்தியோகத்தில் அற்புதமான மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. நெருங்கிய உறவுகள் மற்றும் குடும்பத்தாரிடம் கடுமை காட்ட வேண்டாம். வரவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டு. சில நேரங்களில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். 

விருச்சிகம் 

இந்த வாரம் விருச்சிகம் ராசியினருக்கு பழைய குடும்ப கடன்கள் தீரும். குடும்ப உறவினர்களுடன் சகஜமான சூழ்நிலை ஏற்படும். பெரியவர்களின் ஆசிகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் சிக்கல்களை திறமையாக சமாளிப்பார்கள். மாணவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவர். நண்பர்களால் உதவி உண்டு. மனைவியால் மற்றும் சகோதரியால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் நிம்மதியும் ஏற்றமும் உண்டு. வெளிநாட்டு அழைப்புகளும் ஏற்றமும் உண்டு. ஆபரணச் சேர்க்கைகள் மற்றும் வாகனச் சேர்க்கைகள் உண்டு. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். பதவி மாற்றமும் இடமாற்றமும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 

தனுசு 

இந்த வாரம் தனுசு ராசியினருக்கு தடைபட்ட திருமண விஷயங்கள் நல்ல விதமாக முடியும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கும். மன அமைதியும் சந்தோஷமும் நீடிக்கும். எந்தப் பிரச்னைகளையும் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். சிந்தனையோடு காரியங்களை செய்தால் நீங்கள் வெற்றி அடையலாம். சந்தோஷம் அதிகரிக்கும். ஏதோ ஒரு இடத்தில் பணம் கிடைத்து விடும். கணவன் மனைவியிடையே சில குழப்பங்களும் நெருடல்களும் ஏற்படலாம். வாரக் கடைசியில் சில எதிர்பாராத மாற்றங்கள் நிகழலாம். ஆரோக்கியத்திலும் பயணத்திலும் குடும்ப பிரச்னைகளிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

மகரம் 

மகரம் ராசியினருக்கு இந்த வாரம் மருத்துவ செலவுகள் ஏற்படும். அன்றாட பணிகளை கவனிப்பதற்கே நேரம் போதாத அளவுக்கு பிஸியாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கமான பணியில் சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். மாணவர்கள் சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். திருமண காரியம் போன்ற சுப காரியம் முயற்சிகள் சாதகமாகும் நேரம் இது. மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும். யாரைக் குறித்தும் அவமரியாதையாகப் பேச வேண்டாம். சரியாக விசாரிக்காமல் ஒரு செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கும்பம் 

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் சேர்ந்து இனிமையான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் தங்கள் தனித்திறன்களை காட்ட வேண்டும். மாணவர்கள் தங்களுடைய கலைத் திறமைகளை வளர்த்துக் கொள்வர். மனைகள் வாங்கி விற்பது முதலிய தொழில்களைச் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இல்லத்தில் சுப காரிய முயற்சிகள் பலனளிக்கும். உபரி வருமானம் வாய்ப்பு உண்டு. பண வரவு செலவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிலருக்கு வட்டியில் பணம் போகும். சிலருக்கு ஆடம்பரச் செலவுகளால் பணம் கரையும். 

மீனம் 

இந்த வாரம் மீனம் ராசியினர் வாடகையாக இருந்தால் புதுவீடு குடி போவீர்கள். சொந்த வீடாக இருந்தால் அதில் மராமத்து பணிகளை செய்வீர்கள். பணி செய்யும் உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதால் பணிச்சுமை பெரிதாகத் தெரியாது. சிலருக்கு இடமாற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல வேண்டிய முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் சில பிரச்னைகள் வரலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

இதனையும் படியுங்கள் : துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்!!

Recipes AMP · Quick view
View full