டிசம்பர் மாத ராசிபலன் 2024!
மேஷம் டிசம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கொடுக்கும். மாத தொடக்கத்தில் இருந்து உங்களின் விருப்பங்கள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். இந்த மாதத்தில் உங்களின் புத்திசாலித்தனம், சிறப்பான பேச்ச
மேஷம்
டிசம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கொடுக்கும். மாத தொடக்கத்தில் இருந்து உங்களின் விருப்பங்கள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். இந்த மாதத்தில் உங்களின் புத்திசாலித்தனம், சிறப்பான பேச்சின் மூலம் உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்வுகளும் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ரிஷபம்
டிசம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். மன மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயத்தில் மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். உங்கள் காதல் உறவில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
மிதுனம்
டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இருப்பினும், இந்த மாதம் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். உங்கள் வேலை தொடர்பாக மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. இடமாற்றத்திற்கான கோரிக்கை நிறைவேறும். மாதத்தில் இரண்டாம் வாரத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பொறுமையுடன் எந்த செயலிலும் ஈடுபட முயற்சிகள் வெற்றியடையும்.
கடகம்
டிசம்பர் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். நிதி விவகாரங்கள் தீர்வை நோக்கி செல்லும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் உங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. மேலும் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் உங்கள் வேலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
சிம்மம்
டிசம்பர் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலனகளை கொடுக்கும் மாதமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் கவனமாக எடுப்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, உங்களின் நேர்மறை எண்ணம் மற்றும் கடின உழைப்பு உங்களை மிகவும் சிறப்பானவராக வெளிக்காட்டும். இம்மாதத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
கன்னி
டிசம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு இயல்பான மாதமாக இருக்கும். இருப்பினும், பொருளாதார விஷயங்கள் போன்ற சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையானதாக இருக்கும். உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
துலாம்
டிசம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். சில காரியங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். இம்மாதத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். மாதத்தின் நடுப்பகுதியில் நீதிமன்ற வழக்குகள் தொந்தரவு செய்யலாம். இதனால் நிறைய செலவும் ஏற்படலாம். வீட்டின் பெரியவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிக்கவும். தொழில் செய்பவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
விருச்சிகம்
டிசம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபபலன்கள் நிறைந்த மாதமாக இருக்கும். பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள். பண வரவு குறித்த நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மாதத்தில் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். இந்த காலகட்டத்தில், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து நிதி நன்மைகள் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்க்கவும்.
தனுசு
டிசம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கலாம். மாத இறுதியில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் கோபம் மற்றும் அவசரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு உங்களை சிக்கலில் தள்ளும்.
மகரம்
டிசம்பர் மாதம் மகர ராசியினருக்கு பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் சிறிய பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த காலகட்டத்தில், நீங்கள் பணம் தொடர்பான சில பெரிய வேலைகளையும் செய்யலாம். வேலை செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கும்பம்
டிசம்பர் மாதத்தில், கும்ப ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனினும், வேலையில் முன்னேற்றம் காணலாம். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். உயர் பதவி கிடைக்கலாம். இரும்பு வியாபாரிகளுக்கு இந்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வியாபாரம் செழிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
டிசம்பர் மாதம் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதம். நிதி ரீதியாக இது ஒரு நல்ல காலமாக, பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். உயர் அதிகாரிகளை மகிழ்விக்க அளவுக்கு அதிகமாக உழைக்காதீர்கள். வேலை மாற்றங்களையும் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். மாதத் தொடக்கத்தில் அதிக பணம் செலவழிக்க நேரிடும், நடுவில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இம்மாதத்தில் உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : கேது பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?