வார ராசிபலன் – 7 டிசம்பர் 2025 முதல் 13 டிசம்பர் 2025 வரை!!

மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்ப உறவுகளுக்குள் சுமூகமான நிலை ஏற்படும். வெளியூர் பிரயாணங்கள் மூலம் பொருளாதார வரவு உண்டு. வியாபாரிகள் அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்க

By ·

மேஷம் 

மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்ப உறவுகளுக்குள் சுமூகமான நிலை ஏற்படும். வெளியூர் பிரயாணங்கள் மூலம் பொருளாதார வரவு உண்டு. வியாபாரிகள் அரசு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்கான ஆலோசனைகளை பெறுவர். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உழைப்புக்கான பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் செலவுகள் கடன் வாங்க நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் வேண்டாம். அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்கள் அடைபட்டு மன நிம்மதி ஏற்படும். தொழில்துறையினருக்கு பழைய கடன்கள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் மூலம் வேலைப்பளு அதிகமாகும். மாணவர்கள் யோகா, ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பர். திருமணமாகி குழந்தைகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை நல்லபடியாக செலவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடங்கல்கள் தாமதங்கள் உண்டு. வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலருக்கு சொந்த நாடு திருப்பக்கூடிய கஷ்டங்கள் ஏற்படும்.

மிதுனம் 

மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். மனதில் புதிய துணிச்சலோடு உலா வருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகவல் தொடர்புகளில் தெளிவாக செயல்படவும். மாணவர்கள் தொழில் நுட்ப, தொழில்துறை பயிற்சிகளை பெறுவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உண்டு. பொருளாதார வெற்றி கிடைக்கும். கடன் சுமை குறையும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் பலிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பச் சூழல் மனநிறைவைத் தரும். சிலருக்கு விரயங்கள் அதிகரிக்கும் வருமானத்தை விட செலவுகள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம் 

கடக ராசியினருக்கு குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். தாய்தந்தையர் மற்றும் இல்லத் துணையுடன் உறவுகள் மேம்படும். வியாபாரிகள் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு விலகும். மாணவர்கள் புராஜெக்ட்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். சிலர் தொழில்களைத் தொடங்கும் வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். துணிச்சலோடு எந்தக் காரியங்களையும் செய்வீர்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும். இடம் பூமி வாங்கும் முயற்சி கைகூடும். உயர் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படும். மனதில் கற்பனையாக பயம் ஏற்படும்.

சிம்மம் 

சிம்ம ராசியினருக்கு இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளால் பெருமை ஏற்படும். வியாபாரிகள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கூட்டாக இணைந்து செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவர். மாணவர்கள் ஆராய்ச்சி, கலை பிரிவுகளில் சிறப்பாக செயல்படுவர். எடுத்த காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். பொருளாதார ஏற்றம் உண்டு. தடைகள் ஏற்பட்டாலும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டு. சிலருக்கு கணவன் மனைவி உறவுகளில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நீடிக்கும். சக ஊழியர்களை அனுசரிக்க விட்டால் அவர்களால் பிரச்னை உண்டு.

கன்னி 

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் சின்ன சின்ன குடும்ப விஷயங்கள் கூட மனதில் டென்ஷனை ஏற்படுத்தும். அதனால் மௌனம் தேவை. வியாபாரிகளுக்கு புதிய சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். உத்தியோகஸ்தர்கள் புதிய பணிகளை ஏற்று செயல்பட வேண்டும். மாணவர்கள் விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்வர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு ஏற்படும். பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். வெளியிடங்களில் உண்பது முதலிய பழக்கங்களால் ஆரோக்கியம் கெடும். வார்த்தைகளில் கவனம் தேவை. பேச்சில் கடுமையை குறைத்து கொள்ளவும்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். சரியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்களால் உதவி கிடைக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் திறமைக்கு சவாலாக பணிகள் வந்து சேரும். மாணவர்கள் வாய்மொழி தேர்வுகளில் வெற்றி பெறுவர். எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் தலைதூக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு உண்டு. தொழிலில் எதிர் பார்த்த லாபம் உண்டு. ஆரோக்கிய விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. புதிய பதவிகள் கிடைத்தாலும் கூடுதல் பணி சிரமப்படுத்தும். தேவையில்லாமல் பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்.

விருச்சிகம் 

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. அன்புக்குரியவர்களுடன் தொடர்பு ஏற்படும். வியாபாரிகள் ஊழியர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவர். போட்ட திட்டங்கள் செயல்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் கிடைக்கும். இடம் பூமி வாங்கும் யோகம் உண்டு. காரிய வெற்றி உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிக்கும். பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். வாக்கு வாதங்கள் ஏற்படலாம். மனக்கசப்புகள் வரலாம். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.

தனுசு 

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் மனதில் புதிய தெம்பு ஏற்படும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் அமைதியான சூழ்நிலை ஏற்படும். வியாபாரிகள் புதிய இடங்களில் கிளை தொடங்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய, கூடுதலான பணிச்சுமையை ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும். குடும்பப் பிரச்னைகள் குறையும். தன பாக்கியங்கள் அதிகரிக்கும். வேலையில் தனித்துவமான திறமையைக் காட்டுவீர்கள். கவனக்குறைவால் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். வீண் பழிகளுக்கு ஆளாகாமல் ஜாக்கிரதையாக இருங்கள். சிலருக்கு திடீர் தடைகள், மன சஞ்சலங்கள், குழப்பங்கள் ஏற்படலாம். சிறிய அளவில் பணத்தட்டுப்பாடு வரலாம். 

மகரம் 

மகரம் ராசியினருக்கு புதிய விஷயங்கள் தெரியும் நேரம் இது. குடும்ப பொருளாதார செலவு அதிகரிக்கும். பிறரை தேடிச் சென்று உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு பழைய ஒப்பந்தங்களில் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் நேரம் பணிகளை செய்ய வேண்டும். மாணவர்கள் சக மாணவர்களுடன் கூட்டாக படிக்க வேண்டும். தேவைக்கேற்ற பொருளாதாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும். தடைபட்ட காரியங்கள் எப்படியாவது ஒரு விதத்தில் சுபமாக முடிந்துவிடும். சகோதர உறவுகளால் செலவுகளும் மனக்கசப்பும் ஏற்படலாம். தேவையற்ற விஷயத்தில் மற்றவர்களின் செயல்களில் மூக்கு நுழைக்க வேண்டாம்.

கும்பம் 

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத பண வரவு உண்டு. ஒரு சிலர் தங்களுடைய பழைய ஆசிரியர்களை சந்தித்து பேசி மகிழ்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணைந்து வெற்றி பெறுவர். மாணவர்கள் முன்னாள் பள்ளி விழாவில் கலந்து கொள்வர். அரசாங்க உதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். பிரயாணங்கள் மகிழ்ச்சியும் சாதகமும் உண்டு. தொழில் வளர்ச்சி கருதிச் செய்யும் முயற்சிகள் பலன் அளிக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றங்கள் வரலாம். கடன் பிரச்னைகளால் பகை ஏற்படலாம்.

மீனம் 

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் சமூக மதிப்பு உயரும். வெளி வட்டாரங்களில் தகவல் தொடர்பு மேம்படும். வியாபாரிகள் வர்த்தக விரிவாக்கம் செய்யலாம். வேறு வேலையை எதிர்பார்த்த உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். ஆய்வு படிப்பு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவர். அதிக உழைப்பு இருந்தாலும் கைமேல் ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சி தடையின்றி நடக்கும். குழந்தைகளின் கல்வி முதலிய முன் னேற்றங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்பு அதிகரிக்கும். அதனால் மனஸ்தாபம் வரும். சிலருக்கு இடமாற்றம் ஊர்மாற்றம் உண்டு.

இதனையும் படியுங்கள் : 2026ல் தன்‌ பாதையை மாற்றும் ராகு, கேது இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை தான்!!

Recipes AMP · Quick view
View full