வார ராசிபலன் – 14 டிசம்பர் 2025 முதல் 20 டிசம்பர் 2025 வரை!!
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரத்தின் முற்பகுதியில் அலைச்சலும், பிற்பகுதியில் தன வரவும் இருக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நிம்மதி தரும். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த வாரத்தின் முற்பகுதியில் அலைச்சலும், பிற்பகுதியில் தன வரவும் இருக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நிம்மதி தரும். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம் அதனால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடன் பாக்கிகள் வசூலாகும். பாகப் பிரிவினைகள் வழக்குகள் சாதகமாக முடியும் வாய்ப்புண்டு. கணவன் மனைவி உறவுகளில் விட்டு கொடுத்துச் செல்லவும். சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் சில கவலைகளும் தொல்லைகளும் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் குருபகவான் சஞ்சாரத்தால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பழைய கடன்கள் தீர்ந்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வார்கள். வெளிநாட்டு வேலை பெரும் முயற்சிகள் பலன் தரும். வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். இடம் வாங்குவது பூமி வாங்குவது முதலில் யோகங்கள் கூடும். சகோதரர்களால் நன்மை உண்டு. உறவினர்களிடம் நயம் பயமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த வாரம் குருவின் சஞ்சாரத்தால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். பணத் தொல்லைகள் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் ரகசியங்களை சக ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டாம். மாணவர்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் பலன் தரும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பிறருடன் வீண் பகை பொல்லாப்பு ஏற்படலாம். பழக்கவழக்கங்களில் கவனம் தேவை.
கடகம்
கடக ராசியினருக்கு இந்த வார இறுதியில் எதிர்பாராத பண வரவு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பெரியோர்களது ஆசிகளால் நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் அல்லது துறை மாற்றம் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் முயற்சிகளில் திடீர் மாற்றங்கள் வரலாம். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெறுவார்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு சேமிப்பைக் கரைக்கும். உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படும். அது இடமாற்றமாக இருக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் அஷ்டம சனி நடப்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். மாணவர்கள் கல்வியில் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார உயர்வு, வழக்கில் வெற்றி சகோதரர்களின் உதவி முதலிய விஷயங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வெற்றிக்கு உதவும். சொத்து வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற காரியங்களைச் செய்து மன நிம்மதியை இழக்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த வாரம் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாகி பல நல்ல விஷயங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிகளை பெறுவார்கள். கணவன் மனைவி உறவுகளின் இணக்கம் ஏற்படும். அதனால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். விரும்புகின்ற, எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய கட்டிடத்திற்குச்செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். யாரிடமும் வேகமாகப் பேசி விரோதத்தை வளர்க்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த வாரம் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம் நடந்தேறும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்களின் தொல்லை விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு. மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை செய்வார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். வேலை மாற்றங்கள் மனதுக்கு ஏற்றபடி அமையும். மாமன் வகை உறவுகள் கை கொடுக்கும். உடன்பிறப்புகள் வழியில் கருத்து வேறுபாடுகள் வரலாம். வழக்குகள் எளிதாக முடியாமல் இழுத்தடிக்கப் படலாம். சிலர் வீண் பழிகளுக்கு ஆளாகும் படி நேரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் பணவரவில் தடை தாமதங்கள் ஏற்பட்டு விலகும். இவ்வாரம் மௌனமாக இருப்பது தான் பல விதங்களில் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக படிக்க வேண்டும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத நன்மைகள் உண்டு. பூமி வாங்கும் யோகம் உண்டு. கடன் சுமை குறையலாம். சுபகாரிய முயற்சிகள் பலிக்கும். எதையும் தைரியத்தோடு எதிர் கொள்வீர்கள். யாரிடமும் முக்கியமான பொறுப்புகளை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மனக்கசப்பு வரும். சில நேரங்களில் வரவைவிட செலவு அதிகரித்து பொருளாதார நெருக்கடியும் வரலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த வாரம் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். சுற்றத்தார்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இது சாதகமான வாரம் தான். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மகிழ்வார்கள். தொழில் போட்டி அகலும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் நல் வாய்ப்பு கிடைக்கும். தேவையில்லாத வாக்குறுதி அளிக்க வேண்டாம். வாக்குறுதியை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் வரும்.
மகரம்
மகர ராசியினருக்கு இந்த வாரம் மனதில் புதிய தைரியம் ஏற்படும். இளைய சகோதரர்களால் பல நன்மைகள் உண்டு. பொருளாதார ரீதியாக சில தடங்கல்கள் ஏற்பட்டு விலகும். உத்தியோகஸ்தர்களின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும். மாணவர்களுக்கு படிப்பில் வழக்கத்தை விட கூடுதல் ஆர்வம் ஏற்படும். பெற்றோர் வழியில் சில நல்ல விஷயங்கள் நடக்கும். சகோதரக் கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும் கௌரவமும் கூடும். முன்னோர்களின் ஆசிகள் உங்களுக்கு உண்டு. பொருளாதாரத்தில் சிக்கல் இல்லை. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார சிக்கல்கள் விலகும். மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவது முக்கியம். தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். பொருளாதாரமும் குடும்ப அமைதியும் உண்டு. மகிழ்ச்சியும் உண்டு. பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. அவர்களுக்காக எடுத்த முயற்சிகள் நீங்கள் விரும்பியபடி நடக்கும். என்னதான் வரவு வந்தாலும் செலவுகளும் குறையாமல் இருக்கும். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் எந்தவித வாக்குவாதமும் வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் வேண்டாம்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த வாரம் மனதில் அமைதி அதிகரிக்கும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும் அதனால் சிக்கனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மாணவர்கள் மூத்த மாணவர்கள் அல்லது ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறவும். தொழில் வளர்ச்சியும் உத்தியோக மேன்மையும் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. மனதில் உற்சாகம் இருக்கும். செலவுகள் நல்லபடியாகவே நடை பெறும். வீட்டுக்குத் தேவையான நல்ல பொருள்களை வாங்குவீர்கள். சிலருக்கு அலைச்சலும் சில நேரங்களில் நிம்மதிக் குறைவும் ஏற்படும். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
இதனையும் படியுங்கள் : துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்!!