கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்!
பொதுவாக மற்றவர்கள் உதவி என்று கேட்டு வரும் போது ஒரு சிலர் வனமிறங்கி பணம் கொடுத்து உதவி செய்வார்கள் ஆனால் அப்படி கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்குள் நிறைய சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள். என்னதான் நாம் அந்த பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை என்றால் அதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செ
பொதுவாக மற்றவர்கள் உதவி என்று கேட்டு வரும் போது ஒரு சிலர் வனமிறங்கி பணம் கொடுத்து உதவி செய்வார்கள் ஆனால் அப்படி கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்குள் நிறைய சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள். என்னதான் நாம் அந்த பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை என்றால் அதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யலாம்.
கர்ம வினை
ஒரு சிலர் பணக்காரர்களாக இல்லாவிட்டாலும் உதவி என்று கேட்டு வந்ததற்காக உதவி செய்வார்கள். அதனை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் அவர்களை மிகவும் வருத்தப்பட வைப்பார்கள் ஆனால் கர்ம வினையின் காரணமாக நிச்சயமாக அவர்கள் அந்த பணத்தை ஏதாவது ஒரு வகையில் வீண் செலவு செய்ய வேண்டியது இருக்கும். அவர்களுக்கு கர்மவினையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
கொடுத்த பணத்தை திருப்பி வாங்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாடு
கொடுத்து பணத்தை கேட்பதற்கு நேரில் சென்றாலும் ஒரு சிலர் நாளை தருகிறேன் பிறகு தருகிறேன் என்று ஏமாற்றுவார்கள் அப்படிப்பட்டவர்களிடம் பணத்தை வாங்குவதற்கு பிறந்த தேதியை நாள் மாதம் வருடம் என அனைத்தையும் மொத்தமாக கூட்ட வேண்டும். கூட்டி வரக்கூடிய எண்ணில் இறுதி இலக்க எண் ஒன்று என்று வந்திருந்தால் மாதத்தின் ஒன்றாம் தேதி அன்று போய் பணத்தை கேட்டால் சிறிது பணத்தை யாவது வாங்க முடியும்.
ஏற்ற வேண்டிய தீபம்
சனிக்கிழமை என்று ராகு காலம் எமகண்டத்தை தவிர மற்ற நேரங்களில் அரச மரத்தடியில் ஒரு அகல் விளக்கு கற்பூரத்தை வைத்து ஏற்றி அந்த கற்பூர புகை ஏதாவது ஒரு தட்டில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அந்த தட்டில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து மை போன்று தயார் செய்து கொள்ளுங்கள். அந்த கருமை நிறம் மையை ஒரு வெள்ளை நிற பேப்பரில் மோதிர விரலில் தொட்டு யார் உங்களுக்கு பணம் தர வேண்டுமோ அவர்களுடைய பெயரை எழுதி எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதையும் எழுத வேண்டும் அது காய்ந்த பிறகு நான்காக மடித்து அரச மரத்தடிக்கு சென்று அந்த பேப்பரை கீழே வைத்து அதன் மேல் ஒரு விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றி வர வேண்டும் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை 16 சனிக்கிழமைகள் செய்தால் சீக்கிரத்திலேயே உங்களுடைய பணம் திரும்ப கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைய ஏற்ற வேண்டிய தீபம்!