உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்குவதற்கு இந்த இந்த பொருட்கள் அவசியம் இருக்க வேண்டும்!

என்னதான் நாம் வசதியாகவும் செல்வ செழிப்புடன் பணக்காரராக வாழ வேண்டும் என்று நினைத்து சில பரிகாரங்களை செய்தாலும் அந்த பரிகாரங்கள் ஒருபோதும் நமக்கு பலன் கொடுத்து இருக்காது அதற்கு காரணம் நம் வீட்டிற்குள் சில பொருள்கள் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் குடும்பத

By Prem Kumar · 7/12/2022

என்னதான் நாம் வசதியாகவும் செல்வ செழிப்புடன் பணக்காரராக வாழ வேண்டும் என்று நினைத்து சில பரிகாரங்களை செய்தாலும் அந்த பரிகாரங்கள் ஒருபோதும் நமக்கு பலன் கொடுத்து இருக்காது அதற்கு காரணம் நம் வீட்டிற்குள் சில பொருள்கள் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இதில் சில வழிமுறைகள் தவறும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி வந்து தங்குவதற்கான சூழ்நிலை ஏற்படாது. வீட்டில் மகாலட்சுமி வந்து தங்கினால் தான் நம்முடைய வருமானமும் உயரும் நாமும் செல்வ செழிப்புடனும் வசதியாகவும் வாழலாம். அதற்காக இன்று பணம் நம் கையில் வந்து சேர்வதற்கும் நம் கையில் இருக்கும் பணத்தை இழக்காமல் இருப்பதற்காகவும் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் விரிவாக காணலாம் வாருங்கள்.

வீட்டில் இருக்கும் கதவு ஜன்னல்களை திறந்து மூடும் போது கீச் கீச் என சத்தம் வந்தால், எண்ணெய் ஊற்றி சத்தம் வராமல் சரி செய்யுங்கள். இதை போல் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை எண்ணெய் விட்டு கதவை சுத்தமாக பராமரியுங்கள். இது போல சத்தம் வரும் வீடுகளில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.

வீடுகளில் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டே இருக்க கூடாது. கணவன் மனைவி சண்டையாக இருந்தாலும், வேறு பிரச்சனையாக இருந்தாலும் கெட்ட வார்த்தைகளில் திட்டி சண்டை போட்டு கொண்டு இருந்தால் அங்கேயும் மகாலட்சுமி தங்கமாட்டாள்.

வீட்டில் எப்பொழுதும் ஜவ்வாது அல்லது நல்ல நறுமணம் வீசும்படியாக இருக்க வேண்டும். வீட்டில் நிலை வாசலில் சந்தனம் பூசும் போது அதில் ஜவ்வாது கலந்து பூசலாம். வீட்டில் பணம் நகை வைக்கும் இடத்தில் ஜவ்வாது வைக்காலம். இப்படிா வீடு முழுக்க நல்ல நறுமணம் நிலவும் போது மகா லட்சுமி வீட்டில் வந்து தங்குவாள்.

பணம் சேருவதற்கு வீட்டில் கட்டாயமாக கருங்காலியால் செய்யப்பட்ட ஒரு பொருள் இருப்பது அவசியம். அந்த கருங்காலியால் செய்யப்பட்ட பொருளை பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தால் கண் திருஷ்டி விலகி செல்வசெழிப்புடன் வாழலாம்.

பொன் ஊமத்தை மூலிகைச் செடியின் இலை அல்லது குச்சி எடுத்து வந்து மஞ்சள் தண்ணீரில் கழுவி நன்றாக காய வைத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால். உங்கள் வீட்டில் மகாலட்சுமி வந்து தங்குவாள்

Recipes AMP · Quick view
View full