மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முருங்கைக்காய் வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முட

By Prem Kumar · 2/1/2024

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் முருங்கைக்காயில் வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

முருங்கைக்காயில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நறுக்குவதும் சுலபம், சமைப்பதும் சுலபம். ஆண்டு முழுவதும் முருங்கைக்காய் கிடைத்தாலும் பூத்துத் குலுங்கும் காலத்தில் முருங்கையின் ருசியும் அதிகம், விலையும் குறைவு. முருங்கைக்காய் தண்டுகளில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் மினெரல் உகந்த இரத்த-குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகின்றன, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கைக்காய் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உங்கள் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குழந்தைகளும்‌‌ இந்த வடையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான். பள்ளிவிட்டு வந்தவுடன் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் சுவை அள்ளும்.

இதனையும் படியுங்கள் : உரலில் இடித்த ஆட்டுக்கறி வடை இப்படி சுட்டுப் பாருங்க! இந்த டேஸ்டை வாழ்க்கைல மறக்கவே மாட்டீங்க!

Recipes AMP · Quick view
View full