Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முருங்கைக்காய் வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே...

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முருங்கைக்காய் வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் முருங்கைக்காயில் வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

முருங்கைக்காயில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நறுக்குவதும் சுலபம், சமைப்பதும் சுலபம். ஆண்டு முழுவதும் முருங்கைக்காய் கிடைத்தாலும் பூத்துத் குலுங்கும் காலத்தில் முருங்கையின் ருசியும் அதிகம், விலையும் குறைவு. முருங்கைக்காய் தண்டுகளில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் மினெரல் உகந்த இரத்த-குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகின்றன, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கைக்காய் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உங்கள் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குழந்தைகளும்‌‌ இந்த வடையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான். பள்ளிவிட்டு வந்தவுடன் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் சுவை அள்ளும்.

Print
5 from 1 vote

முருங்கைக்காய் வடை | Drumstick Vadai Recipe In Tamil

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் முருங்கைக்காயில் வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். முருங்கைக்காயில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நறுக்குவதும் சுலபம், சமைப்பதும் சுலபம். ஆண்டு முழுவதும் முருங்கைக்காய் கிடைத்தாலும் பூத்துத் குலுங்கும் காலத்தில் முருங்கையின் ருசியும் அதிகம், விலையும் குறைவு. உங்கள் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Drumstick Vadai
Yield: 4 People
Calories: 92kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 6 முருங்கைக்காய்
  • 1 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 துண்டு இஞ்சி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முருங்கக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் ‌மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் வேகவைத்த முருங்கைக்காயை உள்ளிருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு முருங்கைக்காய் விழுதுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு மாவை எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்காய் வடை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 92kcal | Carbohydrates: 8.53g | Protein: 2.1g | Fat: 1.4g | Sodium: 42mg | Potassium: 461mg | Fiber: 3.2g | Vitamin A: 74IU | Vitamin C: 141mg | Calcium: 30mg | Iron: 2.36mg

இதனையும் படியுங்கள் : உரலில் இடித்த ஆட்டுக்கறி வடை இப்படி சுட்டுப் பாருங்க! இந்த டேஸ்டை வாழ்க்கைல மறக்கவே மாட்டீங்க!