Home ஸ்நாக்ஸ் சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க,...

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது என்றால் அந்த இன்பத்திற்கு அளவே இல்லை. சில சுவாரஸ்யமான உணவுகளை நாமே சமைத்து உள்ளது என்பது பெரும் இன்பத்தைத் தரும். அப்படி ஒரு ரெசிபியை இந்த பதிவில் காணலாம்.

-விளம்பரம்-

கோடை காலமாக இருந்தாலும் சரி, அடைமழையாக இருந்தாலும் சரி, பழங்களிலேயே வாழைப்பழம் மட்டும் தான் நமக்கு எப்போதுமே கிடைக்கும். அந்தவகையில் வாழைப்பழத்தை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மில் பலருக்கும் வாழைப்பழம் பிடிக்கும்.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், மருத்துவமனை பக்கமே போக தேவையில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால், வாழைப்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடல் ஆரோக்கியதிற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

வாழைப்பழ கப் கேக் | Banana Cup Cake Recipe In Tamil

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது என்றால் அந்த இன்பத்திற்கு அளவே இல்லை. சில சுவாரஸ்யமான உணவுகளை நாமே சமைத்து உள்ளது என்பது பெரும் இன்பத்தைத் தரும். அப்படி ஒரு ரெசிபியை இந்த பதிவில் காணலாம். கோடை காலமாக இருந்தாலும் சரி, அடைமழையாக இருந்தாலும் சரி, பழங்களிலேயே வாழைப்பழம் மட்டும் தான் நமக்கு எப்போதுமே கிடைக்கும். அந்தவகையில் வாழைப்பழத்தை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: Banana Cup Cake
Yield: 3 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 ஓவன்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 4 வாழைப்பழம்
  • 1/4 கப் உலர் திராட்சை
  • 1/4 கப் சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 கப் பால்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை

  • முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் போட்டு நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை சலித்து வைத்துக் கொள்ளவும். திராட்சையை ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தில் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  • பின் அதனுடன் சலித்து வைத்துள்ள மாவு, பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் ஊறவைத்துள்ள கருப்பு திராட்சை சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் கேக் கப்பில் இந்த கேக் கலவையை சேர்த்து, அதன் மேலே ஊற வைத்த திராட்சையை தூவி விடவும்.
  • பின் 180 டிகிரியில் பத்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் இந்த கேக் கலவையை இருபது நிமிடங்கள் பேக் செய்தது எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ கப் கேக் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 7.3g | Fat: 1.9g | Sodium: 27mg | Potassium: 158mg | Fiber: 4.1g | Vitamin A: 29IU | Vitamin C: 134mg | Calcium: 15mg | Iron: 6.2mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான லாவா கேக் இப்படி ரெம்ப சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷத்துல எல்லாமே காலி ஆகிவிடும்!