சூப்பரான லாவா கேக் இப்படி ரெம்ப சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷத்துல எல்லாமே காலி ஆகிவிடும்!

- Advertisement -

பொதுவா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பேக்கரியில் கிடைக்கிற கேக்கு பண்ணு பிரட் என்று எல்லாமே ரொம்ப பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை அவங்க எல்லாம் அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா இப்ப எல்லாம் அங்க செய்ற கேக் அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்க மாட்டேங்குது காரணம் பயன்படுத்தின பொருட்களையே அவங்க மறுபடியும் மறுபடியும் பயன்படுத்துறாங்க அதனால குழந்தைகளுக்கு பேக்கர்ல வாங்கி கொடுக்க பயமா இருக்கா அப்போ உங்க வீட்ல பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த லாவா கேக் ட்ரை பண்ணி பாருங்க.சுவை ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த குட்டி குட்டி லாவா கேக் ஈவினிங் டைம்ல உங்க குழந்தைகளுக்கு ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் செஞ்சு கொடுத்தா ரொம்பவே ஹாப்பியா சாப்பிடுவாங்க. ஒரு தடவை நீங்க செஞ்சு கொடுத்துட்டா போதும் அதுக்கப்புறம் அடிக்கடி உங்ககிட்ட இந்த லாவா கேக் வேணுன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு இந்த கேக்கோட டேஸ்ட் ரொம்பவே பிடிச்சு போயிடும். சிம்பிளான நம்ம வீட்ல இருக்க கூடிய பொருட்களை வைத்து பணியார சட்டில இந்த கேக் நம்ம செஞ்சு முடிச்சிடலாம்.

- Advertisement -

பணியார சட்டில கேக்கா அப்படின்னு ஆச்சரியமா பார்க்காதீங்க கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் அட்டகாசமா கிடைக்கும். முட்டையே இல்லாம நம்ம இந்த லாவா கேக் செய்றதால நீங்க அசைவம் சாப்பிடாத நேரத்தில் கூட இந்த முட்டை இல்லாத லாவா கேட்க ஈசியா சாப்பிட முடியும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான குட்டி குட்டி லாவா கேக் வீட்டிலேயே எப்படி ஈஸியா செய்வது என்று பார்க்கலாம்

Print
4.67 from 3 votes

லாவா கேக் | Lava Cake Recipe In Tamil

பொதுவா குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பேக்கரியில் கிடைக்கிற கேக்கு பண்ணு பிரட் என்று எல்லாமே ரொம்ப பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை அவங்க எல்லாம் அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா இப்ப எல்லாம் அங்க செய்ற கேக் அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்க மாட்டேங்குது காரணம் பயன்படுத்தின பொருட்களையே அவங்க மறுபடியும் மறுபடியும் பயன்படுத்துறாங்க அதனால குழந்தைகளுக்கு பேக்கர்ல வாங்கி கொடுக்க பயமா இருக்கா அப்போ உங்க வீட்ல பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த லாவா கேக் ட்ரை பண்ணி பாருங்க.சுவை ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Lava cake
Yield: 4
Calories: 94kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 பணியார கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 1 1/2 கப் பால்
  • 1/2 கப் வாசனை இல்லாத எண்ணெய்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 கப் கொக்கோ பவுடர்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • சாக்லேட் துண்டுகள் சிறிதளவு
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எண்ணெய் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும்.
     
  •  
    பிறகு அதனுடன் மைதா மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இறுதியாக அரை கப் பால் சேர்த்து கொஞ்சம் தோசை மாவு பதத்தில் கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பணியார சட்டியில் நெய் சேர்த்து கலந்து வைத்துள்ள மாவை முதலில் அரை குழிக்கு ஊற்றிக் கொள்ளவும்
  • பிறகு ஒரு சாக்லேட் துண்டை வைத்து அதன் மேல் மறுபடியும் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றிக் கொள்ளவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக இரு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான லாவா கேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 94kcal | Carbohydrates: 29g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 1mg

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் முந்திரி கேக் ஒருமுறை இப்படி மட்டும் வீட்டில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!