தித்திக்கும் சுவையில் முந்திரி கேக் ஒருமுறை இப்படி மட்டும் வீட்டில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பண்டிகை காலங்களில் இப்பொழுது எல்லார் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான் இந்த முந்திரி கேக். அந்த காலத்தில் எல்லாம் பண்டிகை காலங்கள் என்றால் முறுக்கு அதிரசம் சீடை என இதைத்தான் செய்வார்கள். இப்பொழுது காலம் மாற மாற மாற அதற்கு ஏற்றார் போல் இனிப்புகளும் ஏராளமாக வந்து கொண்டே தான் இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் காஜு கட்லி என்று அழைக்கப்படும் இந்த முந்திரி கேக் இப்பொழுது மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்று. முந்திரியை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த மாதிரி முந்திரி கேக் அதாவது செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இந்த முந்திரி கேக்கை பெரும்பாலும் அனைவரும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

ஆனால் வீட்டிலேயே இந்த முந்திரி கேக்கை மிகவும் சுவையாக செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த முந்திரி கேக்கை வீட்டிலேயே நம்மால் மிகவும் சுவையாக கடைகளில் கிடைப்பது போலவே செய்ய முடியும். குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையாக மட்டுமல்லாமல் நாம் முந்திரி சேர்த்து செய்வதால் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

எந்த ஊரு இனிப்பையும் நாம் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டிலேயே செய்து கொடுத்தால் கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருக்கும். மிகவும் குறைந்த பொருட்களை வைத்து மிகவும் ரிச்சான ஒரு முந்திரி கேக்கை நம்மால் செய்ய முடியும். எளிமையாக சுலபமாக மிகவும் சுவையாக செய்யக்கூடிய இந்த முந்திரி கேக்கை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 2 votes

முந்திரி கேக் | Cashew Cake Recipe In Tamil

வீட்டிலேயே இந்த முந்திரி கேக்கை மிகவும் சுவையாக செய்யமுடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த முந்திரி கேக்கை வீட்டிலேயேநம்மால் மிகவும் சுவையாக கடைகளில் கிடைப்பது போலவே செய்ய முடியும். குழந்தைகளும் மிகவும்விரும்பி சாப்பிடுவார்கள். சுவையாக மட்டுமல்லாமல் நாம் முந்திரி சேர்த்து செய்வதால்இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எந்த ஊரு இனிப்பையும் நாம் கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டிலேயே செய்து கொடுத்தால் கொஞ்சம் ஆரோக்கியமானதாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Cashew cake
Yield: 4
Calories: 94kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் முந்திரிப்பருப்பு
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முந்திரியை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். முந்திரி நன்றாக ஊழிய பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்த தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு பதம் வரும் வரை அதனை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஆயுத முந்திரிப்பழுதை அதனுடன் சேர்த்து நன்றாககிளறவும்.
     
  • குங்குமப்பூ மற்றும் நெய் சேர்த்து நன்றாக கைவிடாமல்கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த முந்திரி கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • கெட்டியான பிறகு ஒரு பெரிய தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி விட வேண்டும்.
  • பிறகு அந்த கலவையை சமப்படுத்தி உங்களுக்கு தேவையான வடிவத்தில் அதனை வெட்டி எடுத்தால் சுவையான அருமையான முந்திரி கேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 94kcal | Carbohydrates: 29g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 1mg

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் சுவையில் ஒரியோ கேக் இப்படி ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

-விளம்பரம்-