உரலில் இடித்த ஆட்டுக்கறி வடை இப்படி சுட்டுப் பாருங்க! இந்த டேஸ்டை வாழ்க்கைல மறக்கவே மாட்டீங்க!

- Advertisement -

ஆட்டுக்கறியில் பல உணவுகள் செய்தாலும் புதுசா நம்ம இப்ப என்ன செய்யப் போறோம்னா. கிராமப்புறத்தில் ரொம்பவே பேமஸா இருக்குற உரல்ல இடிச்ச ஆட்டுக்கறி வடை எப்படி செய்றதுனு தெரிஞ்சிக்க போறோம்.  ரொம்பவே சுவையா இருக்கும் இதுக்கு நல்ல எலும்பு இல்லாத கறியா வாங்கிட்டு வந்து நீங்க கொத்துக்கறியா கூட வாங்கிட்டு வரலாம். இல்லை நான் நீங்க வெறும் எலும்பு இல்லாத கறியா எடுத்து உரல்ல நல்லா இடிச்சு மசாலாக்களை சேர்த்து செய்தீங்கன்னா ரொம்பவே சுவையா இருக்கும் இந்த வடை.

-விளம்பரம்-

இந்த வடைய வெறும் சாதத்துக்கு கூட சேர்த்து சாப்பிடவே அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த ஆட்டுக்கறிய உரல்ல இடிச்சு வடை சுடும்போது அந்த வடையோட டேஸ்ட்டுக்கு எல்லா சாத்துக்கும் சேர்த்து சாப்பிட அதுவும் வெறும் சாதத்துக்கு மட்டும் இந்த வடையை போட்டு சாப்பிடும்போது அவ்வளவு டேஸ்டா இருக்கும். இந்த வடையை சும்மா நொறுக்கு தீனி மாதிரி கூட எல்லாரும் சாப்பிடலாம். இந்த வடை சின்னவங்களிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ரொம்ப சுவையான இந்த வடையை உரல்ல இடிச்சு பண்ணினோம்னா அவ்வளவு டேஸ்டா இருக்கும். இப்ப யாரு வீட்டுலயும் உரல் இருக்கிறது இல்லை. அதனால இஞ்சி கல்ல நல்லா நசுக்கி இடிச்சிட்டு அது அப்படியே உதிர்த்து விட்டு செய்தோம்னா ரொம்பவே சூப்பரா இருக்கும்.

- Advertisement -

இந்த சுவையான ரொம்ப ரொம்ப டேஸ்டான ஆட்டுக்கறி வடையை எப்படி ரொம்பவே சுலபமா வீட்ல செய்ய போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கிறோம். இதெல்லாம் கிராமப்புறங்களில் ரொம்பவே ஃபேமஸான உணவுகள் அப்படின்னு சொல்லலாம். மாசத்துக்கு ஒரு தடவையாவது கண்டிப்பா இந்த மாதிரி செய்திருவாங்க எடுக்கிற ஆட்டுக்கறி இருந்து எலும்பு இல்லாத கறியா எடுத்து. குழந்தைகளுக்கு ஹெல்தியா குடுக்கணும் கறிய குழந்தைங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு அதை மென்னு சாப்பிட தெரியல அப்படின்னா இந்த மாதிரி வட இந்த மாதிரி செஞ்சு கொடுக்கும்போது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதனால குழந்தைகளுக்கு ஆட்டுக்கறியில் இருக்கிற எல்லா சத்துக்களும் அப்படியே கிடைக்கும். ஆட்டுக்கறி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
No ratings yet

ஆட்டுக்கறி வடை | Mutton Vadai Recipe In Tamil

சுவையான ரொம்ப ரொம்ப டேஸ்டான ஆட்டுக்கறி வடையை எப்படிரொம்பவே சுலபமா வீட்ல செய்ய போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கிறோம். இதெல்லாம்கிராமப்புறங்களில் ரொம்பவே ஃபேமஸான உணவுகள் அப்படின்னு சொல்லலாம். மாசத்துக்கு ஒருதடவையாவது கண்டிப்பா இந்த மாதிரி செய்திருவாங்க எடுக்கிற ஆட்டுக்கறி இருந்து எலும்புஇல்லாத கறியா எடுத்து. அதனால குழந்தைகளுக்கு ஆட்டுக்கறியில் இருக்கிற எல்லாசத்துக்களும் அப்படியே கிடைக்கும். ஆட்டுக்கறி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Mutton Vadai
Yield: 4 People
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ ஆட்டுக்கறி
  • 2 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 15 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 துண்டு பட்டை
  • 8 கிராம்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 20 பல் பூண்டு
  • 2 ஸ்பூன் தனியா விதைகள்
  • 5 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு  தேவையான அளவு
  • எண்ணெய்  தேவையான அளவு

செய்முறை

  • முதலில் எலும்பு இல்லாத ஆட்டுக்கறியை எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு உரலை சுத்தம் செய்துவிட வேண்டும். உரல் இல்லாதவர்கள்இஞ்சி கல்லை சுத்தம் செய்து கொள்ளலாம் அல்லது மிக்ஸியிலும் இதை செய்து கொள்ளலாம்.சுத்தம்செய்து வைத்துள்ள உரலில் ஆட்டுக்கறி காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை , கிராம்புசேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.
  •  
    பிறகு அதில் பச்சை மிளகாய், தனியா விதைகள், சோம்பு,மஞ்சள் தூள் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.
  • பிற அதில் சின்ன வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்துஅனைத்து பொருட்களையும் நன்றாக கெட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இடித்து வைத்துள்ளகறி மற்றும் மசாலா பொருட்களை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கறி வடைக்கான மாவை சிறு சிறுஉருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் வடைகளை பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். பின்பு அதில் உருட்டி வைத்துள்ள சிறு உருண்டைகளை  வடைகளாக தட்டி சேர்க்கவேண்டும்.
  • பின்பு வடையை இருபுறமும் திருப்பி போட்டு நன்றாக வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான ஆட்டுக்கறி வடை தயார். இந்த ஆட்டுக்கறி வடை பழைய சாதத்துடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Cholesterol: 88mg | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg