ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் விதவிதமா சுவையில் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் கடலை மாவுடன்  கோதுமை மாவில் கூட பக்கோடா செய்வார்கள். அதேபோல் உடம்புக்கு ஆரோக்கியம் தரும் ராகி மாவு வைத்து பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி சுவையான இந்த ராகி பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-

ராகி மாவு சேர்த்து ஒரு பக்கோடா செய்முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி இது. ராகி மெது பக்கோடா, உங்க வீட்டில் ஏதாவது ஒரு கீரை இருந்தால் அதை, இதோடு சேர்த்து செய்யும் போது ஆரோக்கியம் இரட்டிப்பாக கிடைக்கும்.

- Advertisement -
Print
5 from 1 vote

ராகி மெது பக்கோடா | Ragi Medhu Pakoda Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துவயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன்கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனைசாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் விதவிதமாசுவையில் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் கடலை மாவுடன்  கோதுமை மாவில் கூட பக்கோடா செய்வார்கள். அதேபோல்உடம்புக்கு ஆரோக்கியம் தரும் ராகி மாவு வைத்து பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகளின்உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.வாருங்கள் அப்படி சுவையான இந்த ராகி பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Ragi Medhu Pakoda
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் ராகி மாவு
  • 50 கிராம் கடலை மாவு
  • 20 கிராம் பச்சரிசி மாவு
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • 1/2 கப் சிறிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன்  நறுக்கிய இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • அகலமான பாத்திரத்தில் சோடா உப்பு வெண்ணெய் சேர்த்து நுரைத்து வருமளவுக் குழைத்து விடவும்.
  • எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்துப் பிசையவும்.
  • பெரிய எலுமிச்சை அளவு உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான ராகி மெது பக்கோடா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fat: 1.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg