Advertisement
அசைவம்

நாளை சன்டே ஸபெஷலாக ருசியான வாத்து ரோஸ்ட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Advertisement

கொஞ்சம் வித்தியாசமான சுவையில் அசைவம் சாப்பிட விரும்புவோருக்கு இது மிகவும் ருசியாக  இருக்கும். வாத்துக்கறி ரோஸ்ட் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. ரசம் சாதம் தயிர் சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ் இது. புரோட்டா, சப்பாத்தி ,புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம,. அத்தனை அருமையாக இருக்கும்.

வாத்து இறைச்சி மிகவும் சத்தானது, எலும்பு திசுவை பலப்படுத்துகிறது இரத்த சர்க்கரை அளவை இயல்பாக்குகிறது. வாத்து ரோஸ்ட் சுவையு டன்  வாயில் நீர் ஊறவைக்கும் கறி, இந்த வாத்து செய்முறை உங்கள் விருந்துக்கு ஒரு சுவையை கூடுதலாகும். வாத்து ரோஸ்ட்  மசாலாப் பொருட்களில் சேர்ந்து நறுமண  மிக்க சுவையான இணை உணவாகும் . விருந்தாளிகளுக்கு, வீட்டில் உள்ளவர்க்கு இதயம் நிறைந்த உணவாக ஏற்றது!  எனவே வாத்துக்கறி ரோஸ்ட் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

Advertisement

வாத்து ரோஸ்ட் | Duck Roast Recipe In Tamil

Print Recipe
கொஞ்சம்வித்தியாசமான சுவையில் அசைவம் சாப்பிட விரும்புவோருக்கு இதுமிகவும் ருசியாக  இருக்கும். வாத்துக்கறி ரோஸ்ட் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. ரசம் சாதம் தயிர் சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ் இது. புரோட்டா, சப்பாத்தி ,புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம,. அத்தனை அருமையாக இருக்கும். வாத்து இறைச்சி மிகவும் சத்தானது, எலும்பு திசுவை பலப்படுத்துகிறது இரத்த சர்க்கரை அளவை இயல்பாக்குகிறது. வாத்துரோஸ்ட் சுவையு டன் 
Advertisement
வாயில் நீர் ஊறவைக்கும்கறி, இந்த வாத்து செய்முறை உங்கள் விருந்துக்கு ஒரு சுவையை கூடுதலாகும்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Duck Roast
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings 4
Calories 119

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கிலோ வாத்து கறி
  • 1 கப் பெரிய வெங்காயம்
  • 2 உருளைகிழங்கு
  • 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • 1 டேபிள்ஸ்பூன் தனியாதூள்
  • 3 டேபிள்ஸ்பூன் மிளகுதூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் சோம்புத்தூள்
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    Advertisement
  • 1/2 டீஸ்பூன் வினிகர்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் உருளைகிழங்கை அரை வேக்காடாக வேகவைத்து ஒவ்வொரு கிழங்கையும் 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, ஏலக்காய், பட்டை, கரம் மசாலா, மஞ்சள்தூள், தனியாதூள், மிளகுதூள், சீரகத்தூள், சோம்புத்தூள் இவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிறிது அரைத்த மசாலாவை தனியாக எடுத்துவைக்கவும். பின்பு கறியை கழுவி சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் அரைத்த மசாலாவையும், உப்பு, வினிகரையும் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
  • பின்பு எண்ணெய்யை சூடாக்கி அதில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.  
  • பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்த மசாலாவை போட்டு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பொரித்து வைத்துள்ள கறித்துண்டுகளை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • கலவை நன்கு கெட்டியாகி இறக்கும் சமயம் உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும். சுவையான வாத்து ரோஸ்ட் தயார்

Nutrition

Serving: 500G | Calories: 119kcal | Protein: 23.5g | Fat: 2g | Sodium: 89mg | Iron: 3.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

10 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

21 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago