சுட சுட சோறுன் சாப்பிட ருசியான முட்டை பீட்ரூட் பொரியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி. உங்கள் வீட்டில

By Prem Kumar · 27/10/2023

வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை பொரியல் செய்து கொடுப்பது சிறந்த வழி. உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம்.

பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். அந்த நன்மைகளாவன இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும், ஸ்டாமினாவை அதிகரிக்கும், இதயத்தை நல்ல அமைப்பில் வைத்துக் கொள்ளும், புற்றுநோயைத் தடுக்க உதவும், ஞாபக மறதியைத் தடுக்க உதவும், சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் கண்களுக்கு நல்லது.

இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக பீட்ரூட் பொரியலை செய்வது மிகவும் சுலபம். பிடித்த காய்கறியை விட பிடிக்காத காய்கறிகள் தான் அதிகம் இருக்கின்றது. அதில் ஒன்று தான் பீட்ரூட் இதை எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் பீட்ரூட் முட்டை வைத்து ஒரு பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full