பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா? சட்டென முட்டை பிரியாணி இப்படி செய்து கொடுங்கள்!
பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்ற
பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி’ இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன.
பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது.
ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் முட்டை பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. முட்டை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. சைவ பிரியர்களுக்கு கூட இந்த முட்டை மிகவும் பிடித்த உணவு என்று கூட சொல்லாம். சாதரணமான முட்டையே அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அந்த முட்டையில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும்? நாம் இந்த பதிவில் சுவையான முட்டை பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.