மதிய வேளையில் சுட சுட சாப்பிட சுவையான இந்த எக் கிரீன் புலாவ் ரெசிபியை செய்து பாருங்கள்!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் தினம் சாதம், சாம்பார், பொரியல் என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்

By Prem Kumar · 13/11/2025

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் தினம் சாதம், சாம்பார், பொரியல் என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான மற்றும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்போது புலாவை முயற்சி செய்து பாருங்கள். புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது.

பொதுவாக வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. ஆனால் வெஜிடபிள் புலாவாக இல்லாமல் சற்று மாற்றாக உங்கள் வீட்டில் முட்டை உள்ளதெனில் முட்டையைக் கொண்டு எக் கிரீன் புலாவ் செய்து கொடுங்கள். புலாவ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.

இந்த எக் கிரீன் புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். அதிக மசாலாக்கள் இல்லாமல், குறைவான நேரத்தில் மிகச் சுலபமாகத் தயாரிக்கப்படும் இந்தச் சுவையான புலாவ் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இந்த ரெசிபியை சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு மகிழலாம். இப்போது சுவையான இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : கேரளா கீமா புலாவ்

Recipes AMP · Quick view
View full