முட்டை கொத்து சப்பாத்தி இப்படி செஞ்சு பாருங்க ரெண்டு நிமிஷத்துல காலி ஆகிவிடும்!

முட்டை கொத்து பரோட்டா என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முட்டை கொத்து பரோட்டாவை போலவே வித்தியாசமாக முட்டை கொத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையாக இருக்கும். இந்த பதிவில் முட்டை கொத்து சப்

By Prem Kumar · 14/10/2024

முட்டை கொத்து பரோட்டா என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முட்டை கொத்து பரோட்டாவை போலவே வித்தியாசமாக முட்டை கொத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையாக இருக்கும். இந்த பதிவில் முட்டை கொத்து சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம். நம்மில் பலருக்கு ருசியான உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதை எப்படி செய்வது என்ற குழப்பமும், பல நேரங்களில் சோம்பறித்தனமும் ஏற்படும்.

இதனால் பல வார விடுமுறை நாட்களை ஹோட்டல்களில் தான் செலவழிப்போம். இட்லி, தோசை, ப்ரெட் ரைஸ், சிக்கன் ரைஸ் என விதவிதமான உணவுகள் இருந்தாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா தான் விருப்பமாக இருக்கும். புரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதிகமாக சாப்பிடக்கூடாது என கட்டளையும் அம்மாக்கள் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். இனி இந்த கவலையில்லை.

குழந்தைகளுக்கு கொத்து புரோட்டோ போன்று சப்பாத்தியிலும் கொத்து சப்பாத்தி செய்துக் கொடுக்கலாம். குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்போதுமே கடினமான வேலை தான். அவர்களுக்கு பிடித்த மாதிரியே செய்து கொடுத்தால் கூட மிச்சம் வைத்து விடுவார்கள் அல்லது சாப்பிடவே மாட்டார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட அமைதியாய் சாப்பிட சப்பாத்தியில் செய்யும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த முட்டை கொத்து சப்பாத்தி.

இதனையும் படியுங்கள் : ஓட்ஸ் வைத்து இவ்வளவு மிருதுவான சப்பாத்தியா ? கோதுமை சப்பாத்தி போல ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full