முட்டை கொத்து பரோட்டா என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முட்டை கொத்து பரோட்டாவை போலவே வித்தியாசமாக முட்டை கொத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையாக இருக்கும். இந்த பதிவில் முட்டை கொத்து சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம். நம்மில் பலருக்கு ருசியான உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதை எப்படி செய்வது என்ற குழப்பமும், பல நேரங்களில் சோம்பறித்தனமும் ஏற்படும்.
இதனால் பல வார விடுமுறை நாட்களை ஹோட்டல்களில் தான் செலவழிப்போம். இட்லி, தோசை, ப்ரெட் ரைஸ், சிக்கன் ரைஸ் என விதவிதமான உணவுகள் இருந்தாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா தான் விருப்பமாக இருக்கும். புரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அதிகமாக சாப்பிடக்கூடாது என கட்டளையும் அம்மாக்கள் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். இனி இந்த கவலையில்லை.
குழந்தைகளுக்கு கொத்து புரோட்டோ போன்று சப்பாத்தியிலும் கொத்து சப்பாத்தி செய்துக் கொடுக்கலாம். குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்போதுமே கடினமான வேலை தான். அவர்களுக்கு பிடித்த மாதிரியே செய்து கொடுத்தால் கூட மிச்சம் வைத்து விடுவார்கள் அல்லது சாப்பிடவே மாட்டார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட அமைதியாய் சாப்பிட சப்பாத்தியில் செய்யும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த முட்டை கொத்து சப்பாத்தி.
முட்டை கொத்து சப்பாத்தி | Egg Kotthu Chapati Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 சப்பாத்தி
- 3 முட்டை
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 கப் குருமா
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சப்பாத்தியை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து கலந்து விடவும்.
- பின் சப்பாத்தி லேசாக வதங்கியதும் முட்டை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- முட்டையுடன் சப்பாத்தி நன்கு கலந்து எல்லாம் வதங்கியதும் சிக்கன் மசாலா, உப்பு , கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இறுதியாக குருமாவை ஊற்றி நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முட்டை கொத்து சப்பாத்தி தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஓட்ஸ் வைத்து இவ்வளவு மிருதுவான சப்பாத்தியா ? கோதுமை சப்பாத்தி போல ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்!