Home சைவம் ஓட்ஸ் வைத்து இவ்வளவு மிருதுவான சப்பாத்தியா ? கோதுமை சப்பாத்தி போல ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி...

ஓட்ஸ் வைத்து இவ்வளவு மிருதுவான சப்பாத்தியா ? கோதுமை சப்பாத்தி போல ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்!

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் ஓட்ஸ் வைத்து நம்முடைய வீட்டிலேயே சாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோதுமை மாவு சப்பாத்தியை விட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாக்கணும்.

-விளம்பரம்-

ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
4 from 2 votes

ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி | Oats vegetable Chapati Recipe In Tamil

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில்ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் ஓட்ஸ் வைத்து நம்முடைய வீட்டிலேயேசாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.இது கோதுமை மாவு சப்பாத்தியை விட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரைபண்ணி பாக்கணும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Oats vegetable Chapati
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 3/4 கப் ஓட்ஸ்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கேரட்
  • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட்
  • 1 வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1/4 கப் தயிர்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • ஓட்சை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து பொடித்து கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி,வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.      
  • ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, துருவிய கேரட், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய் பேஸ்ட்,மல்லித்தூள, சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும் . அடுத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும். ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ரெடி

Nutrition

Serving: 2g | Calories: 84kcal | Carbohydrates: 14.45g | Protein: 5.42g | Fat: 0.4g | Fiber: 5.1g | Calcium: 25mg