Advertisement
சைவம்

ருசியான முட்டை மோமோஸ் வீட்டில் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!

Advertisement

குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தவுடனே என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம்னு யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இதுபோன்று ஒரு முறை எக் மோமோஸ் செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

எக் மோமோஸ் | Egg Momos Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தவுடனே என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம்னு யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது இதுபோன்று ஒரு முறை எக் மோமோஸ் செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Course evening, Snack
Cuisine Indian, TAMIL
Keyword egg momos, எக் மோமோ
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 முட்டை
  • 1 கப் மைதா மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் கொஞ்சம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் மிளகு தூள்

Instructions

  • முதலில் முட்டையை நன்கு வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும். பிறகு அதனை துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து மைதாமாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் . வதக்கும் பொழுது அத்துடன் மிளகாய் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மசாலா வாசனை போனதும் துருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து முட்டை வாசனை போக கிளறி விடவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
  • அடுத்து பிசைந்து வைத்துள்ள மைதா மாவை வட்டமாக தேய்த்து நடுவில் செய்து வைத்துள்ள முட்டை கலவையை வைத்து மோமோ வடிவில் மடித்து வைத்துக்கொள்ளவும். இதுபோன்று எல்லா மாவையும் செய்து இட்லி பாத்திரத்தில் வேக விட்டு பரிமாறவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

18 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago