முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
இப்ப இருக்க குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பாஸ்தா மேகி ப்ரைட் ரைஸ் இந்த மாதிரி உணவுகள் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய தீமைகள் நடக்கும் ஆனாலும் குழந்தைகள் அடம் பிடிச்சு கேக்குறப்போ கண்டிப்பா நம்ம அவங்களுக்கு வாங்கி கொடுத்து தான் ஆகணும்.
இப்ப இருக்க குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பாஸ்தா மேகி ப்ரைட் ரைஸ் இந்த மாதிரி உணவுகள் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய தீமைகள் நடக்கும் ஆனாலும் குழந்தைகள் அடம் பிடிச்சு கேக்குறப்போ கண்டிப்பா நம்ம அவங்களுக்கு வாங்கி கொடுத்து தான் ஆகணும். அந்த மாதிரி இருக்கிறப்போ வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்தமான துரித உணவுகளை சமைத்து ஆரோக்கியமான முறையில் கொடுக்கலாம். அந்த மாதிரி ஆரோக்கியமா வீட்டிலேயே முட்டை பாஸ்தா இந்த மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
பாஸ்தாவ நம்ம குக்கர்ல சேர்த்து செய்ய போறோம் இந்த முட்டை பாஸ்தா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு இந்த முட்டை பாஸ்தா ரெசிபியை செஞ்சு கொடுங்க. இந்த ரெசிபியை மதியம் லஞ்சுக்கு கூட சாப்பிடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த பாஸ்தா ரெசிபியை கொடுத்துப்பாருங்கள் கண்டிப்பா விரும்பி சாப்பிட்டு தான் வருவாங்க. இதுல முட்டைக்கு பதிலாக அப்படியே சிக்கன் சேர்த்தால் சுவையான சிக்கன் பாஸ்தா ரெசிபி தயாராகிவிடும்.
இந்த முட்டை பாஸ்தா ரெசிபிக்கு நம்ம முட்டைய உடைச்சு ஊத்தி தான் சேர்க்க போறோம். இரண்டு விசில் விட்டாலே சூப்பரா தயாராகி விடும். இதுக்கு நம்ம தனியா பாஸ்தாவ வேக வச்சு அதுக்கு அப்புறமா செய்யணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது. இந்த மாதிரி குக்கர்ல செஞ்சுட்டா ஈஸியா இருக்கும் பிரியாணி மாதிரி வாசனையோட வீடு மணக்க மணக்க ஒரு சூப்பரான முட்டை பாஸ்தா தயாராகிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை பாஸ்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வெஜிடபிள் எக் சீஸ் சப்பாத்தி