Advertisement
காலை உணவு

மாலை நேர ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான எக் சாண்ட்விச் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது எக் சாண்ட்விச். நிறைய பேர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லை என்பதற்காக எதையும் சாப்பிடாமல், ஆபிஸிற்கு செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செல்வதால் உடல் நிலை தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது ஈஸியாக செய்து சாப்பிடும் வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் முட்டையை வைத்து, ஒரு சாண்விட்ச் செய்து சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு. இதை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சுவைப்பார்கள். அது மட்டுமின்றி இவை ஒரு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியும் கூட. நம் குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு கொடுத்தனுப்ப மற்றும் நாம் அலுவலகங்களுக்கு எடுத்து செல்ல இவை மிகவும் உகந்தது.

எக் சாண்ட்விச் | Egg Sandwich Recipe In Tamil

Print Recipe
உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது எக் சாண்ட்விச். நிறைய பேர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லை என்பதற்காக எதையும் சாப்பிடாமல், ஆபிஸிற்கு செல்கின்றனர்.
Advertisement
ஆனால் அவ்வாறு செல்வதால் உடல் நிலை தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது ஈஸியாக செய்து சாப்பிடும் வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் முட்டையை வைத்து, ஒரு சாண்விட்ச் செய்து சாப்பிடலாம்.
Course Breakfast
Cuisine Indian
Keyword Egg Sandwich
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 2 People
Calories 67

Equipment

  • 1 பவுள்
  • 1 தவா

Ingredients

  • 2 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
    Advertisement
  • 1 குடைமிளகாய்
  • 1 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1 டீஸ்பூன் ஹெர்ப்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் பெரி பெரி மசாலா

Instructions

  • முதலில் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் மயோனைஸ், தக்காளி சாஸ், பெரி பெரி மசாலா, ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் மற்றொரு பவுளில் முட்டை, உப்பு, பெரி பெரி மசாலா சேர்த்து நன்கு கலந்து பின் முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு பிரெட்டில் நாம்‌ கலந்து வைத்துள்ள மயோனைஸை தடவி அதன்மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய், தக்காளி இவற்றை வைத்து அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ் தூவி, பின் பொரித்து வைத்துள்ள முட்டையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி விடவும்.
  • பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான எக் சாண்ட்விச் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 67kcal | Carbohydrates: 3.9g | Protein: 6.6g | Fat: 4.57g | Sodium: 130mg | Potassium: 127mg | Fiber: 2.1g | Vitamin A: 22IU | Vitamin C: 8mg | Calcium: 24mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான பீட்சா சாண்ட்விச் இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பன்னி பாருங்க!

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago