- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, Snack
விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே எளிமையாக பிரட் கொண்டு செய்யலாம். இது ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பிட்சா சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Ingredients
Method
முதலில் 2 பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் பாஸ்தா சாஸைத் தடவ வேண்டும்.
பின்னர்அந்த ஒவ்வொரு பிரட் துண்டுகளின் இரண்டு முனைகளிலும் சிறிது காய்கறிகளை வைக்க வேண்டும். அடுத்து அதன் மேல் 2 சீஸ் துண்டுகளை நான்காக வெட்டி, சிறு துண்டுகளாக மடக்கி, காய்கறிகளின் மேல் வைக்கவும்.
பிறகுஅதன் மேல் மீதமுள்ள பிரட் துண்டுகளை வைக்க வேண்டும்.இறுதியில் பிரட் டோஸ்டரில் வெண்ணெயைத் தடவி, அதன் மேல் இந்த பிரட் துண்டுகளை வைத்து, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்தால், பிட்சா சாண்ட்விச் ரெடி!!!






