உலகம் முழுவதும் சாண்ட்விச் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது எக் சாண்ட்விச். நிறைய பேர் காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லை என்பதற்காக எதையும் சாப்பிடாமல், ஆபிஸிற்கு செல்கின்றனர். ஆனால் அவ்வாறு செல்வதால் உடல் நிலை தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது ஈஸியாக செய்து சாப்பிடும் வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் முட்டையை வைத்து, ஒரு சாண்விட்ச் செய்து சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு. இதை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சுவைப்பார்கள். அது மட்டுமின்றி இவை ஒரு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியும் கூட. நம் குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு கொடுத்தனுப்ப மற்றும் நாம் அலுவலகங்களுக்கு எடுத்து செல்ல இவை மிகவும் உகந்தது.
எக் சாண்ட்விச் | Egg Sandwich Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தவா
தேவையான பொருட்கள்
- 2 முட்டை
- 1 பெரிய வெங்காயம்
- 1 குடைமிளகாய்
- 1 தக்காளி
- 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ்
- 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
- 1 டீஸ்பூன் ஹெர்ப்ஸ்
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
- 1 டீஸ்பூன் பெரி பெரி மசாலா
செய்முறை
- முதலில் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் மயோனைஸ், தக்காளி சாஸ், பெரி பெரி மசாலா, ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் மற்றொரு பவுளில் முட்டை, உப்பு, பெரி பெரி மசாலா சேர்த்து நன்கு கலந்து பின் முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு பிரெட்டில் நாம் கலந்து வைத்துள்ள மயோனைஸை தடவி அதன்மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய், தக்காளி இவற்றை வைத்து அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ் தூவி, பின் பொரித்து வைத்துள்ள முட்டையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி விடவும்.
- பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான எக் சாண்ட்விச் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான பீட்சா சாண்ட்விச் இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பன்னி பாருங்க!