Advertisement
அசைவம்

காரசாரமான முட்டை சுக்கா செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் முட்டைகள் இல்லாமல் எந்த ஒரு உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. நாம் ஹோட்டல் சென்றால் கூட முட்டை இல்லாமல் நாம் எந்தவித உணவுப் பொருட்களையும் ஆர்டர் செய்வது கிடையாது. அப்படி இன்றைய மக்களின் வாழ்வியல் முறையுடன் முட்டை ஒன்றினைந்து போனது. முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவித்த முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று அவித்த முட்டையை வைத்து முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முட்டை சுக்கா | Egg Sukka Recipe in Tamil

Print Recipe
முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவித்த முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று அவித்த முட்டையை வைத்து முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Side Dish
Cuisine Indian, TAMIL
Keyword Egg Sukka, முட்டை சுக்கா
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 155

Equipment

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 8 முட்டை
  • 4 tbsp எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • ¼ tbsp சோம்பு
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • கருவேப்பிலை சிறிது
  • 8 tbsp சின்ன வெக்காயம் நறுக்கியது
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp கறி மசாலா
  • 1 tbsp மிளகாய்த்தூள்

அரைக்க

  • 2 tbsp மிளகு
  • 2 tbsp சீரகம்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில்
    Advertisement
    வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி நாம் எடுத்து வைத்துள்ள முட்டைகளை அதில் போட்டு சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • முட்டை கொதிநீரில் நன்றாக வெந்ததும் முட்டையை தனியாக எடுத்து. முட்டை ஓட்டை உடைத்து மஞ்சள் கரு உடையாமல் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு முட்டையின் வெள்ளை கருவை சிறு சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு வேறொரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு
    Advertisement
    எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பின்பு என்னை சூடேறியதும் பட்டை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • அதன் பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின்பு வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், கறி மசாலா மற்றும் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் சேர்த்து அரைத்துக் கொண்டு அந்த பொடியையும் அதனுடன் சேர்த்து போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.
  • பின்பு மசாலா நன்றாக வதங்கியதும் அதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளை கருவளையம் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.
  • கடைசியாக மஞ்சள் கருவை சேர்த்து மஞ்சள் கரு உடையாமல் கிளறி விடவும் பின்பு சிறிது கொத்தமல்லியை தூவி கடாய் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் முட்டை சுக்கா இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4Person | Calories: 155kcal | Carbohydrates: 1.1g | Protein: 13g | Fat: 11g | Saturated Fat: 3.3g | Cholesterol: 373mg | Sodium: 124mg | Potassium: 126mg | Sugar: 1.1g

English Overview: egg sukka is one of the most important dishes in india. egg sukka recipe or egg sukka eppadi seivathu or egg sukka recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

2 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

3 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

4 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

8 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

9 மணி நேரங்கள் ago