மாலை நேரம் பக்காவான ஸ்நாக்ஸ் சாப்பிட முட்டை காய்கறி பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடியது முட்டை. சில குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம்பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு முட்டையை பணியாரம் போன்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்

By Prem Kumar · 13/3/2024

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடியது முட்டை. சில குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம்பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு முட்டையை பணியாரம் போன்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஈசியாக நாம் முட்டை பணியாரத்தை செய்யலாம். முட்டை வைத்து பல ரெசிபிக்கள் செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் முட்டை மற்றும் காய்கறிகள் சேர்த்து சூப்பரான சுவையில் பணியாரம் செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக நாம் செய்கின்ற ஸ்னாக்ஸ் ரெசிபிக்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் , அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள்.

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த முட்டை காய்கறிகள் பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த முட்டை காய்கறிகள் குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க. இனி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள் சீக்கிரம் காலியாகிவிடும். மாலையில் டீ குடிக்கும்போது சுட சுட ஏதாவது சாப்பிட்டால்தான் டீ டைம் நிறைவாக இருக்கும். அந்த வகையில் உங்கள் டீ குடிக்கும் நேரத்தை புத்துணர்ச்சியாக்கும் இந்த முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு நாவுக்கு விருந்தளியுங்கள். உங்கள் மாலை நேரமும் சுவை மிக்கதாக மாறும். அதுமட்டுமல்லாமல் காலை நேரம் டிபனுக்கு உகந்தது இந்த முட்டை காய்கறிகள் பணியாரம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : திருவண்ணாமலை இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full