சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான திருவண்ணாமலை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள்.
இனி கவலை வேண்டாம் மிக சுலபமாக இந்த திருவண்ணாமலை ஸ்பெசல் இனிப்பு பணியாரம் நம் வீட்டிலே செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மாலை ஸ்னாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவாங்க. பண்டிகைக்கால பணியாரம் இருக்கட்டும். நமது முன்னோர்கள் அன்றாட சமையலில் செய்யப்படும் காரப்பணியாரம், குழிப்பணியாரம், முட்டை பணியாரம், இனிப்பு பணியாரம், பருப்பு பணியாரம் என்று விதவிதமான பலகாரங்கள் மாலை நேர பலகாரமாக எப்போதும் வீட்டில் இருக்கும். செய்வதற்கு எளிமையான பலகாரங்களும் ஒரு வேளை உணவாக எடுத்து கொண்டார்கள்.
இவை எல்லாம் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காதவையே என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். சமையலே தெரியாது என்பவர்கள் கூட செய்து அசத்தக் கூடிய சுலபமான இனிப்பு பணியாரம் உணமையில் ஆரோக்கியமானதும் கூட. வழக்கமாக இனிப்பு பணியாரம் செய்ய விரும்புவோர் இட்லி மாவில் வெள்ளத்தை கலந்து அதை வேக வைத்து விரைவில் பணியாரம் தயாரித்துவிடுவார். இப்படி செய்தால் அந்த பணியார மாவு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அதே நேரம் மைதா, அரிசி மாவு, வெள்ளம் சேர்த்து பணியார மாவு தயாரித்தால் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு அந்த மாவு கெடாது. அரிசி மாவில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை கொண்டு செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகளில் இந்த இனிப்பு பணியாரமும் ஒன்று. அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
திருவண்ணாமலை இனிப்பு பணியாரம் | Sweet Paniyaram Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 குழிபணியார கல்
தேவையான பொருட்கள்
- 200 கி அரிசி மாவு
- 100 கி மைதா
- 100 கி வெல்லம்
- 1/2 டீஸ்பூன் சமையல்சோடா
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1 வாழைப்பழம்
- 1/4 டீஸ்பூன் உப்பு
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லத்தை சேர்த்து அதனுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- இது நன்கு கொதித்ததும் அதை ஒரு பவுளில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- பின் ஒரு பாதிரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, சோடாமாவு, பிசைந்த வாழைப்பழம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் வெல்லப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து நெய் விட்டு ஒரு குழி கரண்டி மாவை ஊற்றி ஒரு பக்கம் நன்கு வெந்தவுடன் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான திருவண்ணாமலை இனிப்பு பணியாரம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பாரம்பரிய முறையில் இனிப்பும், புளிப்புமாக இருக்கும் சுரைக்காய் தொக்கு இப்படி செஞ்சா அருமையாக இருக்குமே!