Home சைவம் பாரம்பரிய முறையில் இனிப்பும், புளிப்புமாக இருக்கும் சுரைக்காய் தொக்கு இப்படி செஞ்சா அருமையாக இருக்குமே!

பாரம்பரிய முறையில் இனிப்பும், புளிப்புமாக இருக்கும் சுரைக்காய் தொக்கு இப்படி செஞ்சா அருமையாக இருக்குமே!

சுரைக்காய்  வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு அருமையான தொக்கு செய்தால் எப்படி இருக்கும்?சுரைக்காயை எடுத்து இது போல வெல்லம், புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. ஆரோக்கியமான சுரைக்காய் தொக்கு எளிதாக செய்யலாம்.

-விளம்பரம்-

பலரின் வீடுகளிலும் சுரைக்காயை சாம்பார் வைப்பதற்கும், காரக்குழம்பு வைப்பதற்கும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் சுரைக்காயை தனியாக சமைத்து கொடுத்தால் அதனை பலரும் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை சுரைக்காயில் இவ்வாறு சுவையான வறுவல் செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சுரைக்காய் தொக்கு, புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம் அனைத்திற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் இதனை சமைத்து விடலாம். வாருங்கள் இந்த சுரைக்காய் தொக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
1 from 1 vote

சுரைக்காய் தொக்கு | Bottlegourd Thokku Recipe In Tamil

சுரைக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைத்து ஒருஅருமையான தொக்கு செய்தால் எப்படி இருக்கும்? சுரைக்காயை எடுத்து இது போல வெல்லம், புளிஎல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடானசாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சுரைக்காய் உடல் சூட்டைகுறைக்கும். வாருங்கள் இந்த சுரைக்காய் தொக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Thokku
Cuisine: tamil nadu
Keyword: Bottlegourd Thokku
Yield: 4
Calories: 987kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 சுரைக்காய்
  • புளி எலுமிச்சை அளவு
  • வெல்லம் சிறிது
  • 2 மேசைக்கரண்டி தனி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/2 தேக்கரண்டி தனியா
  • 1/2 தேக்கரண்டி சீரகம்

தாளிக்க

  • கடுகு சிறிது
  • சீரகம் சிறிது
  • நல்லெண்ணெய் சிறிது
  • பெருங்காயம் சிறிது

செய்முறை

  • பூண்டினை தோல் நீக்கி வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
  • அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடிக்கவும்.
  • சுரைக்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம். பெருங்காயம் தாளித்து, சுரைக்காய் சேர்த்து வேகும் வரை வதக்கவும். கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு சுண்டி எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும். நன்கு ஒட்டாதவாறு கிளறி ஆற வைக்கவும். கண்ணாடிஅல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்
     

Nutrition

Serving: 700g | Calories: 987kcal | Carbohydrates: 64g | Protein: 6.9g | Sodium: 648mg | Potassium: 1094mg | Fiber: 4.7g | Sugar: 2.3g | Calcium: 5.4mg