Home ஸ்நாக்ஸ் மாலை நேரம் பக்காவான ஸ்நாக்ஸ் சாப்பிட முட்டை காய்கறி பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சி...

மாலை நேரம் பக்காவான ஸ்நாக்ஸ் சாப்பிட முட்டை காய்கறி பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

kuzhi paniyaram

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடியது முட்டை. சில குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம்பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு முட்டையை பணியாரம் போன்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஈசியாக நாம் முட்டை பணியாரத்தை செய்யலாம். முட்டை வைத்து பல ரெசிபிக்கள் செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் முட்டை மற்றும் காய்கறிகள் சேர்த்து சூப்பரான சுவையில் பணியாரம் செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக நாம் செய்கின்ற ஸ்னாக்ஸ் ரெசிபிக்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் , அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள்.

-விளம்பரம்-

ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த முட்டை காய்கறிகள் பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த முட்டை காய்கறிகள் குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க. இனி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள் சீக்கிரம் காலியாகிவிடும். மாலையில் டீ குடிக்கும்போது சுட சுட ஏதாவது சாப்பிட்டால்தான் டீ டைம் நிறைவாக இருக்கும். அந்த வகையில் உங்கள் டீ குடிக்கும் நேரத்தை புத்துணர்ச்சியாக்கும் இந்த முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு நாவுக்கு விருந்தளியுங்கள். உங்கள் மாலை நேரமும் சுவை மிக்கதாக மாறும். அதுமட்டுமல்லாமல் காலை நேரம் டிபனுக்கு உகந்தது இந்த முட்டை காய்கறிகள் பணியாரம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

kuzhi paniyaram
Print
2 from 1 vote

முட்டை காய்கறி பணியாரம் | Egg veg Paniyaram Recipe In Tamil

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக்கூடியது முட்டை. சில குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம்பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு முட்டையை பணியாரம் போன்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஈசியாக நாம் முட்டை பணியாரத்தை செய்யலாம். முட்டை வைத்து பல ரெசிபிக்கள் செய்து சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் முட்டை மற்றும் காய்கறிகள் சேர்த்து சூப்பரான சுவையில் பணியாரம் செய்ய உள்ளோம். இதனை வழக்கமாக நாம் செய்கின்ற ஸ்னாக்ஸ் ரெசிபிக்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: Egg Veg Paniyaram
Yield: 4 People
Calories: 67.3kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குழி பணியார கல்

தேவையான பொருட்கள்

  • 3 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி அத்துடன் மிளகுத்தூள், உப்பு மற்றும் நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  • பின் கேரட் துருவல், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் வதங்கி பச்சை வாசம் போனதும் முட்டை கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டை கலவையை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி இரண்டு நிமிடங்கள் வேக விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான முட்டை காய்கறிகள் பணியாரம் தயார். இந்த முட்டை பணியாரத்துடன் தக்காளி சாஸ் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 67.3kcal | Carbohydrates: 1.6g | Protein: 6.64g | Fat: 4.57g | Sodium: 130mg | Potassium: 126mg | Vitamin A: 22IU | Calcium: 24.7mg | Iron: 2.91mg

இதனையும் படியுங்கள் : திருவண்ணாமலை இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!