குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கல்யாண் செய்த ருசியான எம்டி சால்னா ரெசிபி இதோ !!
எப்போதும் வீட்டில் தோசை இட்லி, புரோட்டா என அனைத்திற்கும் ஒரே சாம்பார் சட்னி என்று அரைத்த உங்களுக்கும் அலுத்துப் போயிருக்கும், சாப்பிட்ட மற்றவர்களுக்கும் அலுத்துப் போயிருக்கும். ஆகவே இன்றைய பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக கரி இல்லாமல் சப்பாத்தி முதல் தோசை வரை தொட்டு சாப்பிட கூடிய அரு
எப்போதும் வீட்டில் தோசை இட்லி, புரோட்டா என அனைத்திற்கும் ஒரே சாம்பார் சட்னி என்று அரைத்த உங்களுக்கும் அலுத்துப் போயிருக்கும், சாப்பிட்ட மற்றவர்களுக்கும் அலுத்துப் போயிருக்கும். ஆகவே இன்றைய பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக கரி இல்லாமல் சப்பாத்தி முதல் தோசை வரை தொட்டு சாப்பிட கூடிய அருமையான எம்டி சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம். சால்னா பரோட்டா மட்டுமன்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சப்பாத்தி பூரிக்கு ஏற்ற ருசியான காய்கறி சாகு குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
சால்னா பல ஊர்களில் பல விதமான முறைகளில் செய்யப்படுகிறது. குறிப்பாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா மிகவும் சுவையாக இருக்கும். ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. எனவே சுவையான சால்னா சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.