குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கல்யாண் செய்த ருசியான எம்டி சால்னா ரெசிபி இதோ !!

- Advertisement -

எப்போதும் வீட்டில் தோசை இட்லி, புரோட்டா என அனைத்திற்கும் ஒரே சாம்பார் சட்னி என்று அரைத்த உங்களுக்கும் அலுத்துப் போயிருக்கும், சாப்பிட்ட மற்றவர்களுக்கும் அலுத்துப் போயிருக்கும். ஆகவே இன்றைய பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக கரி இல்லாமல் சப்பாத்தி முதல் தோசை வரை தொட்டு சாப்பிட கூடிய அருமையான எம்டி சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம். சால்னா பரோட்டா மட்டுமன்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சப்பாத்தி பூரிக்கு ஏற்ற ருசியான காய்கறி சாகு குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

சால்னா பல ஊர்களில் பல விதமான முறைகளில் செய்யப்படுகிறது. குறிப்பாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா மிகவும் சுவையாக இருக்கும். ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. எனவே சுவையான சால்னா சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Print
No ratings yet

எம்டி சால்னா | Empty Salna Recipe in Tamil

எப்போதும் வீட்டில் தோசை இட்லி, புரோட்டா என அனைத்திற்கும் ஒரே சாம்பார் சட்னி என்று அரைத்த உங்களுக்கும் அலுத்துப் போயிருக்கும், சாப்பிட்ட மற்றவர்களுக்கும் அலுத்துப் போயிருக்கும். ஒரே சமையல் செய்ய யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே இன்றைய பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக கரி இல்லாமல் சப்பாத்தி முதல் தோசை வரை தொட்டு சாப்பிட கூடிய அருமையான எம்டி சால்னா எப்படி செய்வது என்று பார்ப்போம். சால்னா பரோட்டா மட்டுமன்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Salna
Yield: 4 People
Calories: 161kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி
  • 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான
  • எண்ணெய் தேவையான

அரைக்க

  • 4 பட்டை
  • 2 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 8 சின்ன
  • 1 டேபிள் ஸ்பூன் சம்பு
  • 5 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 கப் தேங்காய்
  • 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1/4 டீஸ்பூன் கசகசா
  • 10 முந்திரி

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, முந்திரி, இஞ்சி சேர்த்து நன்கு வறுத்து அதனுடன் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  • பின் இதனை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பூண்டு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, அண்ணாச்சி பூ, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கி கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • இப்போது சிறிது கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி விடவும். வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதனை 5 நிமிடம் வரை வதக்கி விட்டு பிறகு அதனுடன் நாம் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்.
  • பிறகு ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இப்போது சிறிதளவு உப்பு சேர்த்து சால்னாவை 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • மசாலா நன்கு வெந்து சால்னா சிறிது கெட்டி பதம் வந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான சால்னா தயார். இந்த சால்னா இட்லி, தோசை மற்றும் பரோட்டாவுடன் மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 161kcal | Carbohydrates: 4.6g | Protein: 7.3g | Fat: 14g | Sodium: 18mg | Potassium: 705mg | Fiber: 2.4g | Calcium: 92mg | Iron: 4.58mg