வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய தமிழக விநாயகர் கோவில்கள்!
கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்டது விநயாகர் கோவில் தான் என்றும் சொல்லப்படுகிறது. விநாயகர் பல வடிவங்களில், பல ஊர்களில் காட்சி தருகிறார். விநாயகரின் ஒவ்வொரு உருவத்தையும் தரிசிப்பதற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அதன்படி த
கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்டது விநயாகர் கோவில் தான் என்றும் சொல்லப்படுகிறது. விநாயகர் பல வடிவங்களில், பல ஊர்களில் காட்சி தருகிறார். விநாயகரின் ஒவ்வொரு உருவத்தையும் தரிசிப்பதற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் கோயில்களில் புகழ் பெற்ற விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பது குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கோவில்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று தரிசித்து விட்டு வருவது வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
விநாயகரின் சிறப்புகள்
மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும். அம்பாள், பெருமாள், சிவபெருமான் ஆகியோருக்கு முறையான சிற்ப முறைப்படி உருவங்கள் செய்து வழிபட வேண்டிய அவசியம் உண்டு. அப்படி இல்லாவிட்டால், அந்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்காது. ஆனால் பிள்ளையாருக்கு இந்த விதிமுறைகள் எதுவும் கிடையாது. சிறிதளது மஞ்சளோ அல்லது சந்தனமோ பிடித்து வைத்தால் கூட அதில் பிள்ளையார் எழுந்தருளி அருள்புரிவார் என்பதே அவருக்கான சிறப்பு. எளிமையான தெய்வமாக இருக்கும் விநாயகப் பெருமான் ஆற்றங்களை, குளக்கரை, மரத்தடி, சாலையோரங்கள் என எத்தனையோ இடங்களில் வீற்றிருந்து அருள் செய்தாலும்,சில புகழ்பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபடுவது அதிக பலன்களை தரும்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் சிவன் கோவிலாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் பிள்ளையாரை பிரதான தெய்வமாக கொண்ட கோவிலாக மாறியது. ஆவணி மாதத்தில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சூரசம்ஹாரம் நடக்கும் ஒரே விநாயகர் கோவில் இது மட்டும் தான். இங்கு வீற்றிருக்கும் விநாயக பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு காட்சி அளிக்கிறார்.
திருச்சி மலைக்கோட்டை விநாயகர்
திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்த கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும் என்பது வியப்பான உண்மை. இவரின் எதிரே சென்று நின்று, தரிசித்தாலே நம்முடைய மனதில் உள்ள பாரங்கள், அழுத்தங்கள் குறைந்து அமைதி தானாக வந்து விடும்.
மதுரை முக்குறுணி விநாயகர்
மதுரை கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் நம் மதுரையின் புகழை இன்றும் உலகிற்கு எடுத்து கூறுவது மீனாட்சியம்மன் கோவில் தான். இருந்த போதிலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே இருந்து நமக்கும் அருள்பாலிப்பவர் தான் முக்குறுணி பிள்ளையார். முக்குறுணி பிள்ளையார் சன்னதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதிக்கும் சுந்தரேசுவரர் சன்னதிக்கும் இடையே கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்கு புறம் அமைந்துள்ளது. இந்த பிள்ளையார் சிலை மிக பெரியது. இந்த விநாயகரை வேண்டிக் கொண்டால், அவர்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
உப்பிலியப்பன் கோவில் விநாயகர்
உப்பிலியப்பன் கோயில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்துள்ளது. திவ்ய தேவங்களில் ஒன்றாக இருக்கும் உப்பிலியப்பன் கோலிலில் வீற்றிருக்கும் விநாயகர் மிகவும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்தவர். இங்கு ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.
உச்சிஷ்ட விநாயகர்
உச்சிஷ்ட விநாயகரை மூலவராக கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு கருவறையில் உள்ள விநாயகர் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோக நிலையில் இடது மடியில் அம்பாளுடன் இருக்கிறார். இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்கள் தேங்காய் மாலை அணிவித்து வழிபட்டால் திருமண தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது.
புலியங்குளம் விநாயகர்
கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டிற்கு சிறப்பு வாய்ந்ததாக அறியப்படுகிறது. அதில் ஒன்று தேவாலயம் மற்றொன்று புலியகுளம் விநாயகர் கோவில். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். வாசுகி எனும் பாம்பை தனது வயிற்றைச் சுற்றிலும் வைத்திருப்பதைப் போன்று காட்சியளிக்கிறார். இதனாலேயே நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால், அவர்களது தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவரை வணங்கினால் வெற்றிகள் தேடி வரும்.
இதனையும் படியுங்கள் : கேட்ட வரங்களை தந்து அருளும் சென்னை நிமிஷாம்பாள்!!