வார ராசிபலன் 01 பிப்ரவரி 2026 முதல் 07 பிப்ரவரி 2026 வரை!!

மேஷம் இந்த வாரம் உங்களுக்கு காரிய சித்தியும், மனமகிழ்ச்சியும் தரும் வாரமிது.புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்குத் திருப்தி அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்

By ·

மேஷம் 

இந்த வாரம் உங்களுக்கு காரிய சித்தியும், மனமகிழ்ச்சியும் தரும் வாரமிது.புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்குத் திருப்தி அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இரட்டிப்பாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இடமாற்றம் விரும்பியபடி நடக்கும். வீடு கட்டும் யோகம் உண்டு. புதிய பொறுப்புகளும் பதவி உயர்வுகளும் உண்டு. சகோதரர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் சிற்சில தடைகள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்திலும் கவனம் தேவை.

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு நிதானத்துடனும் செயல்பட வேண்டிய வாரம் இது. அலைச்சல் இருந்தாலும், வார இறுதியில் நற்பலன்கள் கூடும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செய்வது நல்லது. உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் சமூகத் தொடர்பை விரிவுபடுத்துவார்கள். சேமிப்பு நீடிக்கும். ஆரோக்கியப் பிரச்னைகள் குறையும். அச்சம் விலகும். தொழில் முயற்சிகள் திருப்பு முனையைத் தரும். வணிக விரிவாக்கம் கை கொடுக்கும். சில நேரங்களில் உங்களை அறியாமலேயே பிறர் ஏமாற்றுவார்கள். அதிக வேலைப்பளு இருக்கும். ஓய்வு அவசியம். 

மிதுனம் 

மிதுன ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் வாரமாக இது திகழ்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வெளிநாட்டுத் தொடர்புடைய வணிகங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியத் தடைகள் விலகும். பொருளாதாரம் உயர்வு பெறும். எதிர்பார்த்த நன்மைகள் தடையில்லாமல் கிடைக்கும். நெருக்கடிகள் குறையும். சகோதர ஒற்றுமை குறையலாம். யாரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம் 

கடக ராசியினருக்கு முயற்சிகளில் முன்னேற்றம் காணும் வாரமாக இது அமைகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழி பிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பயணங்களால் பலன் உண்டு. தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம். அபிப்பிராயம் சொல்வதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். வருமானம் அதிகரித்தாலும், அதற்கேற்ற செலவுகள் அதிகரிக்கும் அதனால் கவனமாக யோசித்துச் செலவு செய்யுங்கள்.

சிம்மம் 

சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் ஆளுமைத் திறனும் செயல்திறனும் அதிகரிக்கும் இனிய வாரமாக இது அமையும். சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் கைகூடும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த நிலுவைத் தொகைகள் வசூலாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு முயற்சி வெற்றி பெறும். விற்பனையில் இருந்த மந்த நிலை மாறி, உற்சாகம் கிடைக்கும். சில நேரங்களில் நேர் மாறாக முடிவெடுப்பீர்கள் அவசரப்பட்டு முடிவெடுப்பீர்கள்.

கன்னி 

இந்த வாரம் திட்டமிட்டுச் செயல்படுவதால் வெற்றி பெறும் வாரம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அமைதியைத் தரும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். புதிய முதலீடுகளை செய்வதில் நிதானம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மன நிம்மதி உண்டு. தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். சிலர் புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள் அல்லது சொந்த வீட்டுக்குக் குடிபோவார்கள். எதிலும் கவனமாகவும், பொறுப்புடனும் செயல்படுங்கள். பொல்லாப்புக்களும் உங்கள் மன நிம்மதியைக் கெடுக்கும். கடைசி நேரத்தில் முடிவுகளை மாற்றி அவஸ்தைப் படுவீர்கள்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் யோகமான பலன்கள் அதிகம் நடக்கும் வாரமாக இது அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். சொத்துக்கள் பிரச்னை சாதகமாகும். வெளிநாட்டு தகவல் மகிழ்ச்சி அளிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. வாங்கின கடனும் கொடுக்க வேண்டிய கடனும் பைசலாக வாய்ப்புண்டு. வாக்கு கொடுத்து மனக்கஷ்டத்திற்கு ஆளாக வேண்டாம். சிந்தனை செயல் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்கவும். 

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் சவால்களை முறியடித்து முன்னேறும் வாரமாக இது அமைகிறது. புதிய காரியங்களைத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுகபோகங்கள் கூடும். தாயின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். வெகுகாலமாக தீர்க்கப்படாத பிரச்னை விரைவில் தீரும். உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும். சுபகாரியங்கள் நிகழும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது ஜாக்கிரதையாகச் செல்லவும். தந்தையுடன் கருத்து வேறுபாடு வேண்டாம்.

தனுசு 

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் பக்தியும் நம்பிக்கையும் உங்களுக்குப் பலம் சேர்க்கும் வாரம் இது. சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மன உறுதியோடு எந்தக் காரியத்தையும் செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோக மாற்றம் சிலருக்குச் சாதகமாக அமையும். புதிய பொறுப்புகளும் கௌரவமும் தேடி வரும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டு. சில முயற்சிகள் கடைசி நேரத்தில் நடக்காமல் போய்விடும். 

மகரம் 

மகர ராசியினருக்கு இந்த வாரம் மிகுந்த நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டிய வாரம் இது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப விவகாரங்களை வெளியில் பகிர வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் கொடுப்பது, வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டு. சிலர் வீடு பழுது பார்ப்பார்கள் அல்லது மாற்றுவார்கள். புது வீடு கட்டும் அல்லது வாங்க வாய்ப்புண்டு. திடீர் ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் லாபம் ஏதோ ஒரு வழியில் தடைபடும்.

கும்பம் 

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் காரியத்தடை இருந்தாலும் செல்வாக்கு உயரும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நிறைவேறும். வாழ்க்கைத்துணை ஆதரவு உண்டு. சிலருக்கு வீடு மனை யோகம் உண்டு. புதிய முதலீடுகளில் லாபம் பெருகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புக் கிடைக்கும். வெளிநாடு தூரதேசப் பயணங்கள் பலன் தரும். உற்சாகமான தகவல் வந்து சேரும். எதிர்பாராத ஒரு நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளாலும் மகிழ்ச்சி உண்டு. அவ்வப்பொழுது சிறு சங்கடங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.‌

மீனம் 

மீன ராசியினருக்கு இந்த வாரம் நிதானமான போக்கினால் நன்மைகள் விளையும் வாரம் இது. ஆன்மீகப் பயணம் மற்றும் சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் நற்பலனைத் தரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். வீடு மனை முதலிய விஷயங்களில் முதலீடுகள் சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழில் புதிய திருப்பங்களில் நகரும். நீண்ட கால நோய்களால் சிரமங்கள் அதிகரிக்கும். பதவி மாற்றம் உண்டு அது நீங்கள் விரும்பாதபடி அமைவதால், மன உளைச்சல் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.

இதனையும் படியுங்கள் : சூரிய கிரகணம் 2026

Recipes AMP · Quick view
View full