வார ராசிபலன் 22 பிப்ரவரி 2026 முதல் 28 பிப்ரவரி 2026 வரை!!

மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் வாரத் துவக்கத்திலேயே தடைப்பட்ட காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும் நற்செய்தி வந்து சேரும்.குடும்ப உறவுகளில் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள், சமூக வட்டாரத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். தொழில் மற்றும் வணிகத்தில் புதிய முதலீடுகள் செய்ய

By ·

மேஷம் 

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் வாரத் துவக்கத்திலேயே தடைப்பட்ட காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும் நற்செய்தி வந்து சேரும்.குடும்ப உறவுகளில் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள், சமூக வட்டாரத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். தொழில் மற்றும் வணிகத்தில் புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த காலம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நற்செய்தியை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குவாதங்கள் வேண்டாம். வம்பு வழக்குகளை விட்டு விலகி இருங்கள்.

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் செல்வமும், செல்வாக்கும் உயரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். நெடுநாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து உங்கள் இல்லத்தை மகிழ்விக்கும். உறவினர்களிடையே நிலவி வந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை பலப்படும். சமூகத் தொடர்புகள் விரிவடையும். அலுவலக மேலதிகாரிகளின் பாராட்டும், ஊதிய உயர்வும் கிடைக்கும். பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மறையும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.  பத்திரப்பதிவுகளில் கவனம் தேவை.

மிதுனம் 

மிதுன ராசியினருக்கு இந்த வாரம் அரிய சாதனைகளைச் செய்யும் பொற்காலம். வாரத்தின் முற்பகுதியில் மனதிற்கு இனிய செய்திகள், இல்லம் தேடி வந்து சேரும். நண்பர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குத் புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய பொறுப்புகள் கூடும். சுபகாரிய முயற்சிகள் பலன் அளிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகப் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. பழைய கடன்கள் வசூலாகும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. அதிக கவனத்தோடு செயல்படுங்கள். 

கடகம் 

கடக ராசியினருக்கு இந்த வாரம் மனமகிழ்ச்சியும், காரிய சித்தியும் உண்டாகும். சுற்றத்தாருடன் இணக்கமான சூழல் நிலவும். நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசியல் சந்திப்புகள் எதிர்காலத் திட்டங்களுக்குப் உதவியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையப் பெற்றுப் பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். பண விஷயங்களில் பிரச்னை இருக்காது. விழிப்புடன் இருந்தால், கடன் வாங்காது சமாளித்துக் கொள்ளலாம். சிலருக்கு உடல் அசௌகரியம் இருந்து கொண்டே இருக்கும். சிறுசிறு பிரச்னைகள், குறிப்பாக வயிறு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, அலை கழிக்கலாம்.

சிம்மம் 

சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் ஆளுமைத் திறனும், புகழும் மேலோங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் தடையின்றி வந்து சேரும். குடும்ப பெரியோர்களின் ஆசீர்வாதம் கிட்டும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு போட்டியாளர்களை வீழ்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் கூடுதல் லாபம் கிட்டும். பண வரவு உண்டு. சிலருக்குப் பதவி உயர்வும் உண்டு. புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். சில நேரங்களில் என்ன செய்து என்ன ஆகப்போகிறது என்ற சோம்பல் மனநிலை ஏற்படும்.

கன்னி 

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வாரம். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களை உற்சாகப்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடையே மதிப்பு கூடும். வருமானத்தைவிட செலவுகள் சற்று அதிகரிக்கவே இருக்கும். எப்பொழுதும் மனதில் சஞ்சலங்களும், குழப்பங்களும் ஏற்படும்.வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். தாயாரின் உடல் நிலையில் கவனம் செலுத்தவும்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் வசதி வாய்ப்புகளும், சுகபோகங்களும் பெருகும். ஆபரணச் சேர்க்கை, வாகன யோகம் உண்டாகும். நண்பர்கள் சந்திப்புகள் உற்சாகம் தரும். அரசியல் ரீதியான தொடர்புகள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் கிட்டும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் பலன் தரும். இட விற்பனையில் லாபம் உண்டாகும். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. பிள்ளைகள் மற்றும் பூர்வீகப் பிரச்னைகள் மன வருத்தத்தைத் தரலாம்.

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் வைராக்கியத்துடன் செயல்பட்டு வெற்றிகளைப் பறிக்கும் வாரம். எதிர்ப்புகள் விலகிப் பாதைகள் சீராகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உள்ளத்துக்கு பலம் சேர்க்கும். குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த சுபச் செய்திகள் வந்து சேரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிதிநிலை சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். செயல்கள் திருத்தமாகவும் தைரியமாகவும் திடத்தோடு காரியங்களை அணுகுவீர்கள். நம்பி கடன் கொடுத்து கஷ்டப்பட வேண்டாம். மற்றவர்களின் பேச்சை கேட்டு முதலீடு செய்ய வேண்டாம். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வரலாம். 

தனுசு 

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் குரு இவ்வாரம் பொற்காலமாக அமையும். வழிபாடுகளும், ஆன்மீகப் பயணங்களும் மன அமைதி தரும். குடும்ப பெரியோர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் கிட்டும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும் கௌரவமும் தேடி வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் கிட்டும். வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் புலப்படும். சிலருக்கு இரண்டாவது வருமானம் கைகொடுக்கும். எப்பொழுதோ கொடுத்த பணம் கைக்கு வந்து சேர்ந்து, மகிழ்ச்சியைத் தரும். அவசர முடிவுகள் வேண்டாம். தந்தையுடன் சுமுக உறவு இருக்காது. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். 

மகரம் 

மகர ராசியினருக்கு இந்த வாரம் கடின உழைப்பிற்குப் பின் கனிவான பலன்கள் கிடைக்கும் வாரம். பொறுமையுடன் செயல்பட்டுச் சிக்கலான காரியங்களை முடிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதனைச் சிறப்பாகக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடினாலும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உறுதி. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். தாய் வழி ஆதரவு உண்டு. கல்வி தொடர்பான முயற்சிகள் பலனளிக்கும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு பயணம் சாதகமாகும். பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்காது. வியாபாரத்தில் லாபம் உண்டு. சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.

கும்பம் 

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் சிந்தனையில் தெளிவும், செயலில் வேகமும் ஏற்படும். எதிர்பாராத தனலாபமும், பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருமானமும் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பொருளாதாரத்தில் உள்ள மந்தநிலை மாறும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வீர்கள். தேவைக்கு வேண்டிய பணம் கிடைத்து விடும். மனைவி அல்லது கணவன் வழியில் தனவரவு உண்டு. சுபகாரியத் தடைகள் விலகும். சிலருக்கு திடீர் திடீரென்று கோபதாபங்கள் ஏற்படும். எதையும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்காமல் பேசி சங்கடப்பட வேண்டாம். தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம்.

மீனம் 

மீன ராசியினருக்கு இந்த வாரம் மங்களகரமான பலன்கள் பெருகும். அரசு வழி சலுகைகள் கிடைக்கும். உறவினர் விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். நண்பர்களிடையே உங்கள் மதிப்பு கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். புதிய முதலீடுகள் செய்யலாம். கையில் உள்ள பணத்தை வீண் செலவு செய்யாமல் ஆபரணங்கள், நிலம் வாங்குவது போன்ற விஷயத்தில் முதலீடு செய்யுங்கள். தெய்வதரிசனம், யாத்திரைகள் செய்யும் வாய்ப்பு உண்டு. வருமானத்தைவிட செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். எனவே வருமானத்தை உணர்ந்து செலவைக் கட்டுப்படுத்துங்கள்.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி ராஜயோகம் 2026

Recipes AMP · Quick view
View full