பிப்ரவரி மாதத்திற்கான ராசி பலன்களும் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகளும்!!
பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் வக்கிர நிவர்த்தியோடு சில கிரக நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதால் பலராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான சூழ்நிலை ஏற்படும் எனவே அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம். மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் ம
பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் வக்கிர நிவர்த்தியோடு சில கிரக நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதால் பலராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான சூழ்நிலை ஏற்படும் எனவே அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க சாதகமான மாதமாக அமையும். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் எதிர்காலத்திற்காக கடுமையாக தயாராக வேண்டும். பல எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பல பிரச்சனைகள் நிச்சயமாக தீர்ந்து போகும். ஏதாவது ஒரு வேலை நிலுவையில் இருந்தால் அதை இந்த நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்கலாம். காரிய தடைகளும் நீங்கி மன அழுத்தம் குறையும். புரிதலோடு பல பிரச்சினைகளில் இருந்து நீங்கள் வெளியே வருவீர்கள்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ஒரு நல்ல மாதமாக அமையும். வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பழைய விஷயங்களில் இருந்து நிறைய புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தொழில் பிரச்சனைகளிலிருந்து எளிதாக வெளியே வருவீர்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பணவரவு அதிகரிக்கக்கூடிய மாதமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பழைய விஷயங்களை மீண்டும் வாழ்க்கைக்கல் கொண்டு வருவதால் சில பிரச்சினைகள் ஏற்படும். நீங்கள் உணர்வதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கும். திறமையை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் நல்ல தொடக்கமாக இருக்கும். இதுவரையில் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவீர்கள். வேலையை மாற்ற விரும்பினால் கண்டிப்பாக மாற்றலாம். நேர்காணலுக்கு நீங்கள் தயாராக நன்றாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு திட்டம் தீட்டிய காரியங்கள் அனைத்தும் நன்றாகவே நடந்தேறும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் படைப்பாற்றல் பல நன்மைகளை தரும். வாழ்க்கை முன்னோக்கி செல்வதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் சூழ்நிலை அனைத்தும் சாதகமாக அமையும். வேலையில் இருப்பவர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் பிப்ரவரி மாதம் ஒரு நல்ல மாதமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வழிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் ஒரு நல்ல மாதமாக அமையும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் பழைய முதலீடுகளிலும் லாபம் கிடைக்கும். லாபம் அதிகரித்து வருமானம் திருப்திகரமாக அமைந்து வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் காதல் கை கூடி வரும் உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வீர்கள். வருமானமும் நன்றாகவே அதிகரிக்கும். அதேபோல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளை கண்டுபிடித்து அதில் முன்னேறுவதற்கான கடின உழைப்பையும் போட வேண்டும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் அழிந்து நேர்மறை ஆற்றல் திரும்ப கிடைக்கும். பிப்ரவரி மாதம் மிகவும் சாதகமான நேரம். நீங்கள் இழந்ததை அனைத்தும் திரும்ப பெறுவீர்கள் உங்களுடைய முயற்சிகள் சரியான திசையில் இருந்து அதில் நீங்கள் வெற்றிவாகையும் சூடுவீர்கள்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்று தரும். காதல் வாழ்க்கை சரியான பாதையில் செல்லும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். நிதி வரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் உடல்நலத்தில் கொஞ்சம் பிரச்சனை ஏற்படலாம். எனவே கவனம் அதிகமாக செலுத்த வேண்டும். உறவுகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நேர்மறையாக இருந்தால் நிச்சயமாக பிரச்சனைகளை சரி செய்யலாம். வருமானத்தை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் எனினும் முயற்சிகளுக்கும் அதிக பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்