வார ராசிபலன் 15 பிப்ரவரி 2026 முதல் 21 பிப்ரவரி 2026 வரை!!
மேஷம் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைக் குறிவைத்தே அமையும்.சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி பொங்கும். புதிய காரியங்களைத் தொடங்குவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு குறித்த நற்செய்திகள் வந்து சேரும்.நீங்
மேஷம்
இந்த வாரம் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியைக் குறிவைத்தே அமையும்.சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி பொங்கும். புதிய காரியங்களைத் தொடங்குவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு குறித்த நற்செய்திகள் வந்து சேரும்.நீங்கள் மேற்கொள்ள கூடிய ஒரு வேலை தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரத்தில் உங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும். வீட்டில் விருந்தினர் வருகை மகிழ்ச்சியைத் தரக்கூடும். குழந்தைகள் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் நல்ல யோகங்களைத் தந்து உங்களை உற்சாகப்படுத்தும். கடந்த கால உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்கள் கடின உழைப்பிற்கான நல்ல பலனையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் அகும். மேலும் இந்த வாரத்தில் தொழில் மற்றும் அணைக்கும் தொடர்பாக புதிய வழிகள் திறக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் நண்பர்களின் ஆதரவு உங்கள் மன உறுதியை பலப்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த வாரம் ஆன்மீகப் பயணங்கள் வெற்றி தரும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுப செய்திகள் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்துவிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கடினமான பணிகளை எளிதில் முடிப்பீர்கள். மகிழ்ச்சியான பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. உங்கள் பழைய முதலீட்டிலிருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமான நிறைவடைந்து நிதி நன்மையை அளிக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு இந்த வாரம் சவால்களைச் சாதனைகளாக மாற்றும் வல்லமையை தரும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உறவு வலுப்பெறும். வாரத்தின் பிற்பகுதியில் வீட்டில் சில விசேஷங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். கடின உழைப்பிற்கான மரியாதை கிடைக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் எழக்கூடும். திருமணம் நிச்சயம் அகும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் ஆளுமைத் திறன் மெருகேறும். அரசு வழி காரியங்கள் தடையின்றி முடியும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். தொழில் ரீதியாக நிதிநிலை சீராக இருப்பதுடன், சேமிப்பும் உயரும். தனிப்பட்ட சாதனைகள் மூலம் பாராட்டுகள் வந்து சேரும். இந்த வாரத்தில் உங்கள் முழு பலத்துடன் செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் குடும்பத்தினருடன் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியப்பவர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியினருக்கு எதிர்ப்புகளை வென்று முன்னேறும் வாரமிது. கடன் சுமைகள் குறையும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உங்கள் பணம் எங்கேயாவது சிக்கிக் கொண்டிருந்தால் அந்த பிரச்சனை விலகி பணம் வந்து சேரும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக எடுத்த கடின உழைப்பிற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் தொட்ட வேலை வெற்றிகரமாக முடிக்க முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றும்.
துலாம்
இந்த வாரம் துலாம் ராசியினருக்கு கற்பனைத் திறனையும் படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும். மிகவும் சுறுசுறுப்பாகவும் சில முக்கிய வேலைகளை முடிப்பதில் மும்முறமாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுபசெய்திகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் உதவியால் முக்கியக் காரியங்கள் நிறைவேறும். வாரத்தின் இரண்டாம் பகுதியில் உங்களுடைய நிதி நிலைமை மேம்படும். நீங்கள் வாங்கி இருக்க கூடிய கடனை திரும்ப செலுத்த சூழல் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் குடும்ப நலமும், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். குறிப்பிடத்தக்க நிதி ஆதாயம் அனுபவிப்பீர்கள். உங்களுடைய திறன் மேம்படும். வீடு, வாகனங்களைச் சீரமைப்பீர்கள். அரசியல் தொடர்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். சமூகப் பணிகளில் உங்கள் செயல்திறன் கூடும். உத்தியோகத்தில் கடமைகளைச் சரியாக முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். வேலை எழுத வணிகம் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பீர்கள். பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உருவாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தம் நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுகூலமான செய்திகள் வந்து சேரும். மனதில் தைரியம் பெருகும். இளைய சகோதரர்களுடனான உறவு பலப்படும். சமூகத்தில் உங்கள் பேச்சுக்குத் தனி மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் தனலாகம் கிடைக்கும். நீங்க செய்யக்கூடிய தொழில் அல்லது வணிகம் தொடர்பாக சில லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இந்த வாரத்தில் குழந்தைகள் விஷயத்தில் சில செலவுகள் சந்திக்க வாய்ப்பு உண்டு.
மகரம்
மகர ராசியினருக்கு கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை அறுவடை செய்யும் வாரமிது. குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். நீண்ட நாள் பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். புதிய முதலீடுகள் மூலம் வருமானம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மன ரீதியாகவும் வேலை தொடர்பாகவும் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கும். வாரத் தொடக்கத்தில் உங்கள் கடின உழைப்பின் மூல பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் புது முயற்சிகள் மற்றும் முதலீடுகள் மூலம் லாபத்தை பெறுவீர்கள். கடினமான சூழலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த வாரம் உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும். புதிய ஆற்றலும், உற்சாகமும் உங்களை ஆட்கொள்ளும். குடும்பத்தில் உங்கள் முடிவுகளுக்கு மதிப்பும், ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இந்த வாரம் வெற்றிகரமாக முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் வழிகாட்டுதல் ஊக்கத்தை தரும். காதல் வாழ்க்கையில் அல்லது குடும்பத்தில் உங்கள் துணையுடன் இணக்கமான சூழலும் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசை அல்லது லட்சியம் நிறைவேறும்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த வாரம் செலவுகள் கூடினாலும், சுபச் செலவுகளாகவே அமையும். ஆன்மீகப் பயணங்கள் மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவதால் மன அமைதி கிட்டும். உத்தியோகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பதவி உயர்வும் கிட்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பலன் சாதகமாகவே இருக்கும். இந்த வாரத்தில் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் உங்கள் வேலை அல்லது குடும்பப் பொறுப்புகள் தொடர்பாக மும்முரமாக செயல்படுவீர்கள். மூத்தவர்களின் ஆலோசனைகள் நிதி உதவியும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இதனையும் படியுங்கள் : 2026 கஜகேசரி யோகம் பலன்