வாராந்திர ராசிபலன் பிப்ரவரி 9 2025 முதல் 15 பிப்ரவரி 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியும் நன்மையும் ஆதாயமும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் தைரியமாக

By ·

மேஷம்

இந்த வாரம் பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியும் நன்மையும் ஆதாயமும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் தைரியமாக இறங்குவீர்கள். ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் வெற்றிகரமாகவும் லாபம் தரக்கூடியதாகவும் இருக்கும். எந்தக் காரியத்திலும் தைரியத்துடன் இறங்குவீர்கள். வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப் பாராட்டுவார்கள். நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.

ரிஷபம்

இந்த வாரம் எதிர்பார்த்ததை விடவும் பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. புதிய பங்குதாரர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீடு கட்டவும் வாகனம் வாங்கவும் கேட்ட கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். உங்கள் மனக்குறைகள் நீங்கும். சில அருமையான வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். பொருளாதாரத்திலும் நல்ல ஏற்றம் காண்பீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். வீடு மனை வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

மிதுனம்

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. செலவுகளும் அதிகரிக்கும். உஷ்ணத்தால் உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். சம்பள உயர்வு எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு வாய்ப்புண்டு. உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் விட்டுக்கொடுத்து செல்வதும் நல்லது. அரசு பணியாளர்கள் ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

கடகம்

இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. புதிய இடங்கள் வாங்கும் யோகமும் உண்டு. வாகனங்கள் மாற்றுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். சொத்து பிரச்னை உங்களுக்குச் சாதகமாக முடியலாம். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. அதன் மூலமாக பதவி உயர்வும் ஊதிய உயர்வும் உண்டு. குடும்பத்தினர் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. வீட்டில் சுப செயல்கள் நடக்கும்.

சிம்மம்

இந்த வாரம் தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் இருந்த அழுத்தம் குறையும். விரும்பிய காரியங்கள் நடைபெறும். நீண்ட தூரத்திலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். திருமண முயற்சி நிறைவேறும்.

கன்னி

இந்த வாரம் பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். வருமானத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும். நல்ல வருமானம் வரும். புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உதவி புரிவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், வருமானமும் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் தானாகவே உங்களுக்கு வரும். உடன் பிறப்புகளும் உறுதுணையாக இருப்பார்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

துலாம்

இந்த வாரம் வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக் கூடும். இந்த வாரம் எண்ணிய எண்ணம் நிறைவேறும். திறமை வெளிப்படும். தடைப்பட்ட வேலை நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப உறவுகளை அமைதியோடு வழி நடத்த வேண்டும். வெளிநாட்டில் வசிப்போருக்கு இது நல்ல நிலை. வேலையில் இருப்பவர்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய ஊர் மாற்றம் கிடைக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.

விருச்சிகம்

இந்த வாரம் பணவரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும் கடன் வாங்க வேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை மேம்படும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும். இந்த வாரம் உங்களுக்கு இருந்த தடை விலகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இந்த வாரம் விரும்பிய சொத்து சேரும்.

தனுசு

இந்த வாரம் பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. நண்பர்கள் கை கொடுப்பார்கள். சில விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் மகிழ்ச்சியும் உண்டு. இந்த வாரம் தியானமும் தெய்வ பக்தியும் உங்களுக்கு கை கொடுக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.‌

மகரம்

இந்த வாரம் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வீட்டில் சின்ன சின்ன விசேஷங்கள் நடந்து உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மேல்படிப்பு, பிள்ளைகளின் நலம் முதலிய விஷயங்கள் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைத்திறன் அதிகரிக்கும். பிறர் பாராட்டும் விதத்தில் காரியங்கள் ஆற்றுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

கும்பம்

இந்த வாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சில தவிர்க்க முடியாத பிரயாணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆபரணங்கள் ஆடைகள் வாங்கும் வாய்ப்புண்டு. இந்த வாரம் தொழில் மற்றும் வணிகம் நன்றாகவே நடக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.

மீனம்

இந்த வாரம் பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். விடா முயற்சியால் பலனடைவீர்கள். உங்கள் யோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுப்பது நல்லது. சார்ந்த துறையில் இருப்பவர்கள் பணியில் முன்னேற்றம் பெறுவார்கள். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

இதனையும் படியுங்கள் : 2025ல் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை