அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு சோம்பு சர்பத் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்ட

By Prem Kumar · 25/3/2026

அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செஞ்சு கொடுங்கள்.

அந்த வகையில இந்த கோடை காலத்தில் ரொம்ப ஜில்லென்று இருக்கக்கூடிய சோம்பு சர்பத் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். காலம் காலமாக வெயிலை தணிக்க நாம் வழக்கமாக குடிக்கும் பானங்களில் ஒன்றுதான் சர்பத். சர்பத் குடித்தால் சிறிதளவு தாகம் தீரும் எனவும் உடலில் வெப்பநிலையை சற்று குறைக்கவும் முடியும் என நம்பப்பட்டு வருகிறது. நாம் வழக்கமாக குடிக்கும் சர்பத் சிலருக்கு சலித்து போகி இருக்கலாம்.

இந்த நிலையில் நாம் எளிமையாக வீட்டிலேயே குளுகுளுப்பாக சோம்பு சர்பத் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம். உங்களுக்கு வீட்டிலேயே சர்பத் போடத் தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். எளிமையான முறையில் சோம்பு சர்பத் போடுவது எப்படி என்பதை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, இந்த சர்பத் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி குடிப்பார்கள். இப்போது சுவையான சோம்பு சர்பத் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு மட்கா குல்பி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full