புலாவ் விரும்பி சாப்பிடுபவர்கள் இப்படி வெந்தயம் போட்டு ருசியான வெந்தய புலாவ் செஞ்சு பாருங்க!
காலையில் இட்லி, தோசை மதியத்துக்குச் சோறு, குழம்பு சில நேரம் கலந்த சாதம், இரவு மீண்டும் சிற்றுண்டி என எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தால் யாருக்குத்தான் சலிப்பாக இருக்காது? அதற்காகத் தினம் தினம் விருந்தும் சமைக்க முடியாதுதான். ஆனால், ஆரோக்கிய உணவு செய்து கொடுக்கலாம். வெந்தய புலாவ் இ
காலையில் இட்லி, தோசை மதியத்துக்குச் சோறு, குழம்பு சில நேரம் கலந்த சாதம், இரவு மீண்டும் சிற்றுண்டி என எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தால் யாருக்குத்தான் சலிப்பாக இருக்காது? அதற்காகத் தினம் தினம் விருந்தும் சமைக்க முடியாதுதான். ஆனால், ஆரோக்கிய உணவு செய்து கொடுக்கலாம். வெந்தய புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை.
வெந்தயத்தை வைத்து செய்யும் சமையல் வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன மற்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இது இந்தியில் சாவா என்றும், கன்னடத்தில் சப்பாசிகே சொப்பு என்றும், தெலுங்கில் சோ-குரா என்றும், பஞ்சாபியில் சோவா என்றும், குஜராத்தியில் சுவா என்றும், மராத்தியில் ஷேபு என்றும் அழைக்கப்படுகிறது. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த வெந்தய புலாவ் மணமான மற்றும் சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட. இது உடல் சூட்டை தணிக்க உதவுகிறது, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் அதுமட்டுமல்லாமல் வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. அதனால் ஒரு முறை இந்த வெந்தய புலாவை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்!!