இது வரை மீனில் பஜ்ஜி செய்து சாப்பிட்டிருக்கீர்களா? இல்லையென்றால் உடனே இந்த மீன் பஜ்ஜி செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். பஜ்ஜி என்றாலே வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் சற்று வித்தியாசமாக மீனில் பஜ்ஜி செய்யலாம் தெரியுமா

By Prem Kumar · 3/10/2024

பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். பஜ்ஜி என்றாலே வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் சற்று வித்தியாசமாக மீனில் பஜ்ஜி செய்யலாம் தெரியுமா? அசைவ பிரியர்களுக்கும் மீன் உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த ரெசிபி பிடிக்கும். இந்த சில்லென்ற பருவ காலத்தில் ஒரு கப் தேநீருடன் இந்த மீன் பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் போதும் ஒரு இனிமையான விருந்து கிடைக்கும்.

இதன் மேல் பூசப்பட்டிருக்கும் கடலை மாவின் மொறு மொறுப்பான தன்மையும் உள்ளே மீனீன் மென்மையான தன்மையும் காரசாரமான சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும். மீன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, மீனை சாப்பிட வைக்க ஒரு அருமையான வழி தான் பஜ்ஜியாக செய்து கொடுப்பது தான். எனவே மீனை பஜ்ஜியாக செய்து கொடுத்தால், அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் மாலை வேளையில் டீ/காபி குடிக்க கொடுக்கும் வேளையில் செய்து கொடுத்தால், அவர்களின் பசி நீங்கும்.

தீடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட இந்த மீன் பஜ்ஜி செய்து அசத்திடலாம். ஓமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் மீன் கொண்டு சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான பஜ்ஜி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Recipes AMP · Quick view
View full