Advertisement
அசைவம்

வீடே கமகமக்கும் மீன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

ஒரு சிலருக்கு மீன் வறுவல் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். ஏன் பலருக்கும் பிடிக்கும் இருந்தாலும் பெரும்பாலும் வீட்டில் செய்ய மாட்டார்கள் பின் குடும்பத்துடன் ஹோட்டல் போன்று உணவகங்களுக்கு செல்லும்போது ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் ஒரு சில பேருக்கு எந்த விதத்தில், எந்த அளவில் மசாலா தயார் செய்ய வேண்டும் அதை எப்படி செய்வது என்பதில் பெரும் சந்தேகம் இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

அதனால் இன்று இந்த கிரிஷ்பியான மீன் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை அதன் அளவில் கலந்து நீங்கள் மீன் வறுவல் தயார் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு உச்களுக்கு பிடித்த சுவையில் இருக்கும் ஆகையால் இன்று இந்த மீன் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மீன் வறுவல் | Fish Fry Recipe in Tamil

Print Recipe
ஒரு சில பேருக்கு மீன் வருவல் செய்ய எந்த விதத்தில், எந்த அளவில் மசாலா தயார் செய்ய வேண்டும் அதை எப்படி செய்வது என்பதில் பெரும் சந்தேகம் இருக்கும். அதனால் இன்று இந்த கிரிஷ்பியான மீன் வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை அதன் அளவில் கலந்து நீங்கள் மீன் வறுவல் தயார் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவையே சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு உச்களுக்கு பிடித்த சுவையில் இருக்கும் ஆகையால் இன்று இந்த மீன் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword fish fry, மீன் வறுவல்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 206

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு

Ingredients

  • ½ KG மீன் துண்டுகள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 2  tbsp இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • மீன் வறுவல் செய்வதற்கு பெரிய துண்டுகளாக வருமாறு மீன்களை கடையிலேயே சுத்தப்படுத்தி வெட்டி வாங்கிக் கொள்ளுங்கள், அதன் பின்பு வீட்டிலும் இரு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.
  • அதன் பின் ஒரு பெரிய பவுள் எடுத்து கொண்டு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன்
    Advertisement
    மிளகாய்த்தூள், இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சிறிது கருவேப்பிலை, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போன்ற பொருள்களை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் நாம் கலந்து வைத்திருக்கும் மசாலாவில் அரை எலுமிச்சம் பழத்தின் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவை பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.
  • பின் நாம் வைத்திருக்கும் மீனை ஒன்று ஒன்றாக எடுத்து மீன் துண்டுகளில் அனைத்து இடங்களிலும் மசாலா படும்படியாக மசாலாவில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் மீன்களையும் பிரட்டி எடுத்துக் கொண்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்படி நாம் மசாலாவில் பிரட்டி எடுத்த மீனை 30 நிமிடங்கள் நன்கு மசாலாவுடன் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடேறியதும் அதில் இரண்டு டீஸ்பூன் அளவில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • பின் எண்ணெய் காய்ந்ததும் முன்று மீன் துண்டுகளை வைத்து பொரிந்து கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் மீன் நன்றாக வெந்து வருமாறு திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான மீன் வருவல் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 206kcal | Fat: 12g | Saturated Fat: 2.5g | Cholesterol: 63mg | Sodium: 61mg | Potassium: 384mg

English Overview: Fish Fry is one of the most important dishes in south india. Fish Fry recipe or Fish Fry seivathu eppadi or Fish Fry recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

5 நிமிடங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

3 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

4 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

7 மணி நேரங்கள் ago