Advertisement
அசைவம்

அடுத்தமுறை மீன் வாங்கினால் கமகமனு ஃபிஷ் டிக்கா மசாலா இப்படி ஒருமுறை செய்து பாருங்க

Advertisement

மீன் பிரியர்களுக்கு இந்த ருசியான ஃபிஷ் டிக்கா மசாலா கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக  செய்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இயல்பாகவே அனைவரும் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவர்க்கென்று மீன் சமைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது.

ஆனால் இங்கே வித்தியாசமான மசாலாக்கள் மூலம் சுவையான காரசாரமான ஃபிஷ் டிக்கா மசாலா வைக்கப் போகின்றோம். இதை ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையை பின்பற்றியே ஃபிஷ் டிக்கா மசாலா வைப்பீர்கள். அசைவ வகைகளில் மீன் குழம்பு மீன் வறுவலுக்கு என தனியாக ஒரு கூட்டமே இருக்கும். அசைவத்தில் மற்ற வகைகளை விட மீனுக்கென தனியாக ஒரு சுவை உண்டு.

Advertisement

இந்த மீனை பொறுத்த வரையில் குழம்பு வைப்பதாக இருந்தாலும் சரி பொறிப்பதாக இருந்தாலும் அதற்கான பக்குவத்தில் தான் செய்ய வேண்டும். அப்படி மீனை பக்குவமாக அதே நேரத்தில் மசாலா சேர்த்து ஃபிஷ் டிக்கா மசாலா செய்யப்போகின்றோம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான ஃபிஷ் டிக்கா மசாலா எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

ஃபிஷ் டிக்கா மசாலா | Fish Tikka Masala Recipe In Tamil

Print Recipe
அசைவ வகைகளில் மீன் குழம்பு மீன் வறுவலுக்கு என தனியாக ஒரு கூட்டமே இருக்கும். அசைவத்தில் மற்ற வகைகளைவிட மீனுக்கென தனியாக ஒரு சுவை உண்டு. இந்த மீனை பொறுத்த வரையில் குழம்பு வைப்பதாகஇருந்தாலும் சரி பொறிப்பதாக இருந்தாலும் அதற்கான பக்குவத்தில் தான் செய்ய வேண்டும்.அப்படி மீனை பக்குவமாக அதே நேரத்தில் மசாலா சேர்த்து ஃபிஷ்
Advertisement
டிக்கா மசாலா செய்யப்போகின்றோம்.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமானஃபிஷ் டிக்கா மசாலா எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம்இனி பார்க்க இருக்கிறோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Fish Tikka Masala
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 533

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 12 துண்டுகள் மீன்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியாத் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் தந்தூரி மசாலாபவுடர்

பொரிக்க

  • எண்ணெய் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு
  • 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 வெங்காயம்
  • 2 கிராம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 20 கிராம் முந்திரி
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த வெந்தய இலை
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன், பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள். தனியாத்தூள், மிளகுத்தூள், தந்தூரி மசாலா பவுடர், உப்பு, எலுமிச்சைச்சாறுசேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுதாளித்த பின்னர் வெங்காயம், முந்திரி, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கி, ஆறியதும்மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில்அரைத்த வெங்காயம், தக்காளி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதில் மீதியுள்ள மிளகாய்த்தூள். மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர்சேர்த்து ஒரு கொதி வந்ததும், பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து, காய்ந்த வெந்தய இலையைசேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும். சூப்பரானசைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா ரெடி

Nutrition

Serving: 300g | Calories: 533kcal | Carbohydrates: 23g | Protein: 43g | Cholesterol: 2mg | Sodium: 321mg | Potassium: 422mg | Fiber: 2g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

16 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

23 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago