சனிப்பெயர்ச்சியால் பொற்காலத்தை பெறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்!!
மார்ச் 29ஆம் தேதி இரவு 10.07 மணிக்கு சனிபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். மீன ராசியில் சனி பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது. சனிபகவான் மீன ராசியில் குடியேறுவது பஞ்சமகா யோகத்தை உர
மார்ச் 29ஆம் தேதி இரவு 10.07 மணிக்கு சனிபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். மீன ராசியில் சனி பெயர்ச்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது. சனிபகவான் மீன ராசியில் குடியேறுவது பஞ்சமகா யோகத்தை உருவாக்கப் போகிறது மேலும் சந்திரனின் அதிபதி ராசியான மீன ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அடையப்போவதால் மிதுனம் கும்பம் போன்ற சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகப் போகிறது. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் சாதகமான பல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி அனைத்துமே கிடைக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். லாபம் பெருகும் நிலம் வாங்க கூடிய நல்ல அமைப்பு ஏற்படும். உடல் நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். வேலையில் சாதகமான சூழல் நிலவும். தொழிலில் அனுகூலம் நிறைந்திருக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் நண்பர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். இதனால் பணியிடத்தில் உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். வெளி பார்க்கக்கூடிய இடத்தில் முன்னேற்றம் ஏற்படும் மதிப்பு மரியாதை கௌரவம் அனைத்தும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகி வணிகம் வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அது உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சிகள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தால் நன்மைகள் உண்டாகும். எந்த ஒரு விஷயத்தில் முதலீடு செய்தாலும் அது உங்களுக்கு லாபத்தை மட்டுமே கொடுக்கும். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். பயணத்தின் போது கவனம் அதிகமாக தேவை சாலையில் வண்டி ஓட்டும் போது சற்று கவனம் தேவை.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பல மடங்கு பெருகும். கௌரவம் உயரும் .வேலையில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய பணலாபம் கிடைக்கும். வியாபாரத்தில் தொழிலில் நன்மைகள் கிடைக்கும் லாபம் உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : 2025 செவ்வாய் பெயர்ச்சியால் பல பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிகள்!!