கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பழங்கள் பற்றி தெரியும் ?

இன்றைய நவீன காலத்தில் அதிகமாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே உடல் உழைப்பு நம்மிடம் இருந்து வெகுவாக குறைந்து வருவதை முக்கிய காரணமாகின்றது. முன்பெல்லாம் நாம் வருவதை அனைத்து வேலைகளிலும் உடல் இயக்கம் இருந்து வருந்ததால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அரு

By Prem Kumar · 8/9/2022

இன்றைய நவீன காலத்தில் அதிகமாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே உடல் உழைப்பு நம்மிடம் இருந்து வெகுவாக குறைந்து வருவதை முக்கிய காரணமாகின்றது. முன்பெல்லாம் நாம் வருவதை அனைத்து வேலைகளிலும் உடல் இயக்கம் இருந்து வருந்ததால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட நடந்து செல்லாமல் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படி உடல் உழைப்பே இல்லாமல் நாம் வாழ்வதால் உடலில் கொழுப்பு சார்ந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அது மட்டுமில்லாமல் நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள், புகை பிடித்தல், மது அருந்துதல் போன்று சில பழக்கவழக்கங்களாலும் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகப்படியாக இருக்கின்றன. இன்றைய உடல்நல தொகுப்பில் இந்த அதிகப்படியான கொழுப்புகளை சில பழங்களின் சாப்பிடுவதால் குறைக்கலாம் அது என்னென்ன பழங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.

அவகேடோ பழம்

ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் மீன்களில் அதிகமாக காணப்படும். அதன்பிறகு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள பழம் என்று எடுத்துக் கொண்டால் அது அவகேடோ பழம் தான். இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளதால் நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய தன்மை உள்ளது. மேலும் இந்த பழத்தில் சர்க்கரையை சுத்தமாக கிடையாது. கார்போஹைட்ரேட் என்ற சத்துக்களும் மிக குறைந்த அளவில் காணப்படுவதால் இது நமக்கு கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

தக்காளி பழம்

தக்காளி பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் தக்காளி பழத்தில் நிறைந்து காணப்படுகிறது. ஆகையால் நம் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு தக்காளி பழமும் உதவும் மேலும் தக்காளி பழத்தில் உள்ள சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் உகந்தது.

சிட்ரஸ் அமில பழங்கள்

சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்கள் பொதுவாக நம் சருமத்துக்கு ஏற்றதாக இருக்கும். அதையும் தாண்டி சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால், நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்கள் சாப்பிடுவது பெரிது உதவியாக இருக்கும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்து காணப்படும்.

ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழத்தை நாம் தினசரி சாப்பிடுவதால் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறைவதற்கு ஆப்பிள் பழம் உதவியாக இருக்கும். அதைவிட நம்ம உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக ஆப்பிள் பழம் பெரிதும் உதவியாக இருக்கும் ஏன்னென்றால் அந்த அளவுக்கு சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் நிறைந்து காணப்படுகிறது.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தை நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு இதில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் பப்பாளியும் நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து நம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுக்கும். மேலும் பப்பாளி கார்போஹைட்ரட் சத்துக்ள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய்களை குறைக்கும் தன்மையும் கொண்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும் பப்பாளிக் உண்டு.

Recipes AMP · Quick view
View full