Advertisement
சைவம்

இட்லி, தோசைக்கு ருசியான பூண்டு இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! இனி சாம்பார் சட்னி எதுவும் தேவையில்லை!!

Advertisement

பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி. இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம், இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம், ஒரே மாதிரி இட்லி பொடியை சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான பொடி வகைகள் செய்து சாப்பிட சுவையாக இருக்கும். பூண்டு விரும்பாத மக்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு, சுவையான பூண்டு பொடியை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம்.

பூண்டு இட்லி பொடி | Garlic Idli Powder Recipe In Tamil

Print Recipe
பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி. இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம், இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம், ஒரே மாதிரி இட்லி பொடியை சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான பொடி வகைகள் செய்து சாப்பிட சுவையாக இருக்கும். பூண்டு விரும்பாத மக்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு, சுவையான பூண்டு பொடியை எப்படி தயார் செய்யலாம் என பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian, tamilnadu
Keyword idli podi
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings
Advertisement
4 People
Calories 44.5

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கப் பூண்டு
  • 1/4 கப் உளுந்து
  • 1/4 கப் தேங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 8 வரமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 ஸ்பூன் கல் உப்பு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 4 டீஸ்பூன் நல்லெண்ணெய்

Instructions

  • தோலுரித்த பூண்டை இஞ்சி தட்டும் குழவியில் தட்டி, வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய பூண்டை பொன்னிறம் ஆகும் வரை வறுத்து தனியே வைக்கவும்.
    Advertisement
  • ஆறியதும் கைகளால் அழுதினால் நொறுங்கும் அளவுக்கு வறுபட்டிருக்க வேண்டும்.
  • பின் அதே எண்ணையில் உளுந்து சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
  • பின் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  • 1சொட்டு எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நொறுங்கும் அளவுக்கு வறுக்கவும்.
  • 1ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி விதை சேர்த்து வறுபட்டதும் அதனுடன் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
  • அவை வறுபட்டதும் அடுப்பை அணைத்து அதே சூட்டில் சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுபட்டதும் உளுந்துடன் சேர்த்து ஆற வைக்கவும்.
  • வறுத்த அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் தேங்காய் தவிர மீதி உள்ள வறுத்த பொருட்கள் மற்றும் கல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • பின் அதனுடன் வறுத்த பூண்டு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.
  • இந்த பொடி,எண்ணெய் சேர்த்து செய்திருப்பதால் பிரிட்ஜ்ல் வைத்து 1 மாதம் வரையிலும் பயன்படுத்தலாம்.
  • அவ்வளவுதான். மணமான, சுவையான, பூண்டுஇட்லி பொடி ரெடி. இட்லி தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 44.5kcal | Carbohydrates: 5g | Protein: 6.36g | Fat: 0.16g | Sodium: 17mg | Potassium: 401mg | Fiber: 2.1g | Vitamin C: 31.2mg | Calcium: 181mg | Iron: 1.7mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

1 மணி நேரம் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

4 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago