Advertisement
அசைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகிவிடும் இனி ரத்த பொரியல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

ரத்தப்பொரியல் என்பது மற்ற காய் பொரியல் போன்ற ஒரு பக்க உணவாகும். ரத்த பொரியல் என்பது ஆட்டின் ரத்தத்தில் தயாரிக்கப்படும் உணவு. இது சாதம் மற்றும் ரொட்டி ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். சப்பாத்தியுடன் கூட சாப்பிடலாம். இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிடலாம். இரத்த வறுவல் ஒரு எளிய உணவாகும், மேலும் எளிதில் சமைக்கலாம்.

ஆட்டு ரத்தத்தில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அருமையானது. ரத்தப் பொரியலை இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து ஆட்டு இரத்தத்தை பொரியலாக செய்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படி செய்து சாப்பிடலாம் என்ற குறிப்பை தெரிந்து கொள்வோம்.

Advertisement

ரத்தப்பொரியல் | Goat Blood Fry Recipe In Tamil

Print Recipe
இரும்பு சத்துஅதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிடலாம்.இரத்த வறுவல் ஒரு எளிய உணவாகும், மேலும் எளிதில் சமைக்கலாம். ஆட்டு ரத்தத்தில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட
Advertisement
நிறைவுற்ற கொழுப்புகுறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அருமையானது. ரத்தப் பொரியலைஇந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்தேங்காய் சேர்த்து ஆட்டு இரத்தத்தை பொரியலாக செய்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படிசெய்து சாப்பிடலாம் என்ற குறிப்பை தெரிந்து கொள்வோம்.
Course Fry, Side Dish
Cuisine tamilnadu
Keyword Goat Blood Fry
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 213

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் ஆட்டு ரத்தம்
  • கைப்பிடி கடலைப்பருப்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவைக்கு
  • மஞ்சள் தூள் சிறிது
  • 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • மல்லித் தூள் சிறிது
  • எண்ணெய் தாளிக்கதேவையான அளவு
  • 1 துண்டு பட்டை

Instructions

  • இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி வேக வைக்கவும்.
  • கத்தியால் நடுவில் விட்டு பார்த்து ஒட்டாமல் வருகிறதா என உறுதிப்படுத்தி இறக்கவும்.பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.
     
  • வேகவைத்த ரத்தத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய ரத்தத்தில் கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து பிசையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
     
  • சுவையான ரத்தப்பொரியல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 213kcal | Carbohydrates: 34.48g | Fat: 13g | Sodium: 120mg | Potassium: 19.22mg | Calcium: 105mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

53 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

2 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

6 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

7 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

8 மணி நேரங்கள் ago