சூரியனின் பெயர்ச்சியால் நன்மைகள் பெறப் போகும் சில ராசிக்காரர்கள்!
தற்போது விருச்சிக ராசியில் உள்ள சூரிய பகவான் 17 வது நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகி இருக்கின்றார். மேலும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வரையில் அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் பயணம் செய்வார் இதனால் ஒரு சில நட்சத்திரங்களுக்கு ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகிறத
தற்போது விருச்சிக ராசியில் உள்ள சூரிய பகவான் 17 வது நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகி இருக்கின்றார். மேலும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வரையில் அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் பயணம் செய்வார் இதனால் ஒரு சில நட்சத்திரங்களுக்கு ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகிறது. அனுஷ நட்சத்திரத்தின் அதிபதியான சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால் சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால் ஒரு சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை பெறப்போகிறார்கள்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பால் நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் பல வாய்ப்புகளும் பயணத்திற்கான சில வாய்ப்புகளும் கிடைக்கும். பயணத்தின் மூலம் சில ஆதாயங்களும் உருவாகும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு பகவானின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாகவே அமையும் பணவரவு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். திட்டமிட்டபடி பணிகளை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனி பகவானின் அருளால் கடின உழைப்பிற்கான பலன்கள் வந்தே தீரும். முதலீடுகள் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும். பண வரவு அதிகரித்து அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதரவும் ஆதாயமும் அமையும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் மற்றும் சனி பகவானின் அருளால் எதிரிகளின் தாக்கம் குறையும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களுடைய வெற்றிக்கு தடையாய் இருந்த அனைத்து தடைகளும் விலகும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனீஸ்வர பகவானின் அருளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். சமுதாயத்தை கௌரவமாக வாழ முடியும். பல திருப்தி அனைத்திலும் உருவாகும் வெளிநாட்டிற்கு பயணம் செல்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சியால் கெடு பலன்களை சந்திக்க உள்ள ராசிகள்!!